6.
பெரிய துதிக்கையுடைய யானைத் தொகுதியின் வலிய துயரைப்
போக்கி.
4-6.
யானைக்கு மரக்கலமும் அதன் புண்ணைப் போக்கும் அரசனுக்கு
வாணிகரும் உவமை.
7-9.
முன்பு வந்து இரந்தோர் மகிழும்படி கொடுத்து, பின் வந்து
இரப்போருக்கு ஈதலினின்றும் மாறாத, குதிரைகளை வீசும்
இருக்கையைக்கண்டு செல்வேனாகி வந்தேன்.
மா
சிதறுதல்: "நாளீண்டிய நல்லகவர்க்குத், தேரோடு மாசிதறி"
(மதுரைக். 223 - 4)
9-10.
பெய்யத்தொடங்கி மின் முதலிய தொகுதியையுடைய மேகம்
குளிர்ந்த துளியைச் சொரிந்ததாக, அதனால்.
11.
பலவாக விதைத்தலையுடைய உழவினையும் சிறிய ஏரையும்
உடையோர். சின்மை சிறுமை என்னும் பொருளில் வந்தது.
12.
குளிர்ச்சியையுடைய நீர்த்துறையினிடத்தேயுள்ள பகன்றைப் பூவினது
நன்மையையுடைய மாலையை.
13.
வெளுத்தலுற்ற வெள்ளிய ஆடையைப் போலச் சூடி. பகன்றைக்குக்
கலிங்கம்: "போதுவிரி பகன்றைப் புதுமல ரன்ன அகன்றுமடி கலிங்க முடீஇ"
(புறநா. 393 : 17 - 8). பகன்றை மலரைச்
சூடுதல்: மலைபடு. 459; ஐங்குறு.
87 : 1.
14-5.
விளங்குகின்ற கிரணத்தையுடைய அழகிய மணியைப் பெறுதற்கு
இடமான, அகன்ற இடத்தையுடைய ஊர்களையுடைய நாட்டுக்கு உரிமையை
யுடையோய்.
(பி
- ம்) 2. ததைநிலை. 4. பண்ணிய வினைவர். (6)
77.
|
எனைப்பெரும்
படையனோ சினப்போர்ப் பொறையன்
என்றனி ராயி னாறுசெல் வம்பலிர்
மன்பதை பெயர வரசுகளத் தொழியக்
கொன்றுதோ ளோச்சிய வென்றாடு துணங்கை |
5
|
மீபிணத்
துருண்ட தேயா வாழியிற்
பண்ணமை தேரு மாவு மாக்களும்
எண்ணற் கருமையி னெண்ணின்றோ விலனே
கந்துகோ ளீயாது காழ்பல முருக்கி
உகக்கும் பருந்தி னிலத்துநிழல் சாடிச் |
10
|
சேண்பரன்
முரம்பி னீர்ம்படைக் கொங்கர்
ஆபரந் தன்ன செலவிற்பல்
யானை காண்பலவன் றானை யானே. |
துறை
- உழிஞை யரவம். வண்ணமும் தூக்கும் அது. பெயர் -
வென்றாடு துணங்கை (4)
(ப
- ரை) 3. மன்பதை பெயரவென்றது படை கெட்டோட
வென்றவாறு.
|