3-4.
அரசு களத்தொழியக் கொன்னென்றது அரசரைக் களத்திலே
உடலொழிந்து கிடக்கக் கொன்றென்றவாறு.
கொன்று தோளோச்சிய
(4) பிணம் (5) எனக் கூட்டி, முன்பு தம்முடன்
பகைத்தவரைக் கொன்று தோளோச்சியாடி இப்பொழுது இவன் களத்திற்பட்டுக்
கிடக்கின்ற வீரர்பிணமென அவ்வீரர் செய்தியை அவர் பிணத்தின் மேலேற்றிச்
சொல்லியவாறாக உரைக்க.
வென்றாடு துணங்கைப்
(4) பிணம் (5) என்றது ஊர்களிலேயாடும்
துணங்கையன்றிக் 1களங்களிலே வென்றாடின துணங்கையையுடைய
பிணமென்றவாறு.
இச்சிறப்பானே
இதற்கு, 'வென்றாடு துணங்கை' என்று பெயராயிற்று.
5. மீபிணத்தைப்
பிணமீயெனக் கொள்க. 7.எண்ணிற்றோவென்னும் ஒற்று
மெலிந்தது. 8. கந்துகோளீயாதென்றது வினையெச்சவினைத் திரிசொல். 9.
சாடியென்னும் வினையெச்சத்தினைச் செலவு (11) என்னும் தொழிற்பெயரோடு
முடிக்க.
10. ஈர்ம்படை.......................................................................................................
வம்பலிர் (2),
பொறையன் எனைப் பெரும்படையன் (1) என்றனிராயின்
(2), அவன் தானையிடத்துத் (12), தேரும் மாவும் மாக்களும் (6) எண்ணற்
கருமையின் எண்ணிற்றிலன்; ஆயின் (7), தானையின் யானை தான்
எண்ணினை யோவெனின், அதுவும் எண்ணினேனல்லேன்; (கட்புலனுக்கு
வரையறைப்பட்டது போல) ஆபரந்தாலொத்த செலவிற் பல (11) யானையை
அவன் தானையானே காண்பல் (12) எனக் கூட்டி வினை. முடிவு செய்க.
இதனாற் சொல்லியது
அவன் படைபெருமைச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
இப்பாட்டிற்
பொதுப்படப் படையெழுச்சி கூறியதனை
உழிஞையரவமென்றது ஆண்டு அப்படையெழுங்காலத்து 2நொச்சிமீதிற் போர்
குறித் தெழுந்ததை ஒரு காரணத்தால் அறிந்துபோலும்.
(கு
- ரை) 1-2. வழியிலே செல்கின்ற புதியோர்களே, சினத்தாற்
செய்யும் போரையுடைய சேரன் எவ்வளவு பெரிய படையையுடையவனோ
என்று கேட்பீராயின்.
3-4. தம் பகைவரது
படை கெட்டு ஓடவும், அரசர்கள் போர்க்களத்தில்
இறப்பவும் கொன்று கையைவீசி ஆடியவென்றாடுகின்ற துணங்கைக்
கூத்தையாடிய. துணங்கை யாடியவர் இப்பொழுது பிணமான வீரர்.
5-7. பிணத்தின்மேலே
உருண்ட, வாய் தேயாத சக்கரத்தையுடைய,
செலுத்தற்கேற்பப் பண்ணுதலமைந்த தேரையும் குதிரைகளையும்,
காலாட்களையும் எண்ணுதற்கு முடியாமையின் எண்ணினேனல்லேன்.
8-12. சேரனது
யானைப் படையின் சிறப்பு.
8-9. கட்டுத்தறியைக்
கொள்ளாமல், குத்துக்கோல் பலவற்றை முறித்து
மேலே பறக்கும் பருந்தினது நிலத்தே விழும் நிழலைக் கோபித்து
1"நிலம்பெறு
திணிதோ ளுயர வோச்சிப், பிணம்பிறங் கழுவத்துத்
துணங்கை யாடி", "புலவுக்களத் தோனே, துணங்கை யாடிய வலம் படு
கோமான்" (பதிற்.
45 : 11 - 5, 57 : 3 - 4)
2நொச்சி - மதில்.
|