பக்கம் எண் :

225

79.



உயிர்போற் றலையே செருவத் தானே
கொடைபோற் றலையே யிரவலர் நடுவட்
பெரியோர்ப் பேணிச் சிறியோரை யளித்தி
நின்வயிற் பிரிந்த நல்லிசை கனவினும்
 5




பிறர்நசை யறியா வயங்குசெந் நாவிற்
படியோர்த் தேய்த்த வாண்மைத் தொடியோர்
தோளிடைக் குழைந்த கோதை மார்ப
அனைய வளப்பருங் குரையை யதனால்
நின்னோடு வாரார் தந்நிலத் தொழிந்து
 10




கொல்களிற் றியானை யெருத்தம் புல்லென
வில்குலை யறுத்துக் கோலின் வாரா
வெல்போர் வேந்தர் முரசுகண் போழ்ந்தவர்
அரசுவா வழைப்பக் கோடறுத் தியற்றிய
அணங்குடை மரபிற் கட்டின்மே லிருந்து
 15




தும்பை சான்ற மெய்தயங் குயக்கத்து
நிறம்படு குருதி புறம்படி னல்லது
மடையெதிர் கொள்ளா வஞ்சுவரு மரபிற்
கடவு ளயிரையி னிலைஇக்
கேடில வாக பெருமநின் புகழே.

     துறை - செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும் அது.
பெயர் - நிறம்படு குருதி
(16)

     (ப - ரை) 4. பிரிந்த நின்வயின் நல்லிசையெனக் கூட்டுக; பிரிதல் -
தன்னைவிட்டுத் திக்கு 1விதிக்குக்களிலே போதல்.

     இசை (4) அறியா (5) என முற்றாக அறுத்துரைக்க.

     9. நின்னொடுவாரார் தந்நிலத்து ஒழிந்தென்றது நின்னை வழிபட்டு
நின்னொடு ஒழுகாதிருத்தலேயன்றித் தந்நிலத்திலே வேறுபட்டு
நின்றென்றவாறு.

     யானையெருத்தம் புல்லென (10) வில்குலையறுத்துக் கோலின்வாரா (11)
வேந்தர் (12) என்றது முன்பு நின்வழி ஒழுகாது ஒழிந்திருந்தவழிப் பின்பு தாம்
களத்து நின்போர் வலிகொண்டு இனி நின்வழி ஒழுகுதுமெனச் சொல்லித் தாம்
ஏறிய யானையெருத்தம் புல்லென வில்லின் நாணியை அறுத்து நின்செங்கோல்
வழி ஒழுகாத வேந்தரென்றவாறு.

     13. 2அழைத்தல் - வருத்தத்தாற் கதறுதல்.

     தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து (15) நிறம்படு குருதி (16)
என்றது வீரருடைய, தும்பை சூடியதற்கேற்ப நின்று பொருதலாற்றலையுடைய
உடலானது அசையும்படி வந்த ஓய்வினையுடைய நிறங்களைத் திறந்து விட்ட
குருதியென்றவாறு.


     1விதிக்கு - கோணத்திசை.

     2அழைப்பு - பொருள்புணரா ஓசை (திருச்சிற. 102, பேர்.)