அல்லாத
இடங்களிற் குருதிகொள்ளாமையின், 1நிறங்களைத் திறக்க
ஆண்டு உண்டான குருதியென்பதாயிற்று.
இச்சிறப்பானே
இதற்கு, 'நிறம்படுகுருதி' என்று பெயராயிற்று.
2கோடறுத்து
இயற்றிய (13) கட்டின்மேலிருந்து (14) நிறம்படு குருதி
புறம்படினல்லது (16) மடை எதிர்கொள்ளாக் (17) கடவுள் (18) எனக் கூட்டி,
அவ்வாறு செய்ததொருகட்டில் கொடுவந்திட்டதன் மேலிருந்து அவ்வாறு
கொடுப்பதொரு பலியுண்டாயினல்லது பலி கொள்ளாக் கடவுளென உரைக்க.
கட்டின்மேலிருந்தலல்லது
(14) குருதிபுறம்படினல்லது (16) என அல்ல
தென்பதனை இரண்டிடத்தும் கூட்டிக் கொள்க.
18.
கடவுளென்றது அவனால் இவ்வாறு வழிபடும் கொற்றவையை;
அயிரை - அக்கொற்றவை உறைவதொரு மலை.
கோதைமார்ப
(7), செருவத்துஉயிர்போற்றலை (1); இரவலர் நடுவண்
கொடை போற்றலை (2); பெரியோரைப் பேணிச்சிறியோரை அளித்தி (3),
அனைய நின்குணங்கள் அளப்பரியை; நீ அவ்வாறு ஒழுகுதலாற் (8) பிரிந்த
நின்வயின் நல்லிசை இனிக் கனவிலும் (4) பிறர் நச்சுதலறியா; அவ்வாறு
அறியாமையின் (5), பெரும, அவ்வாறாகிய நின்புகழ் (19) நிலைஇ
நின்னிடத்துக் கேடிலவாக (18) என மாறிக் கூட்டி வினை முடிவு செய்க.
'அனையவளப்பருங்குரையை'
(8) என்றது 'சிறியோரையளித்தி' (3)
என்றதன் பின்னே நிற்கவேண்டுதலின், மாறாயிற்று.
இதனாற்
சொல்லியது, அவன் பலகுணங்களும் ஒருங்கு புகழ்ந்து
வாழ்த்தியவாறாயிற்று.
(கு
- ரை) 1. போரில் உயிரைப் பொருளாக எண்ணமாட்டாய்.
2.
இரப்பாராகிய பரிசிலர்நடுவே கொடையைப் பாதுகாக்க மாட்டாய்;
என்றது அளவிறந்து கொடுப்பாயென்றபடி.
3.
நின்னைக் காட்டிலும் பெரியோர்களைப் பாதுகாத்துச்
சிறியோர்களுக்கு அருள் செய்வாய்.
4-5.
நின்பால் நின்றும் பிரிந்து பல திசைகளிற் சென்ற நின் நல்லிசைகள்
கனவினிடத்தாயினும் பிறரை விரும்புதலையறியா; அறியா: முற்று. கல்வி, வீரம்,
கொடை முதலிய காரணங்களால் இசை பலவகைப் படுதலிற் பன்மையாற்
கூறினார்; பதிற். 12 : 8, உரை.
6.
படியோர்த் தேய்த்த ஆண்மை: மலைபடு. 423.
6-7.
மகளிர் தோளிடைக்குழைந்த தார்: புறநா.
73 : 13-4, குறிப்புரை.
5-7.
விளங்கிய பொய்கூறாத நாவினையும், பகைவரை அழித்த
ஆண்மையையும் உடைய வளையை யணிந்த மகளிருடைய தோளினிடத்தே
குழைந்த மாலையை யணிந்த மார்பை உடையோய். படியோர் -
பிரதியோரென்னும் வடமொழித்திரிவு (அகநா.
22 : 5, உரை). நாவினையும்
ஆண்மையையும் உடைய மார்ப என இயையும்.
1நிறம்
- உயிர்நிலை; "அறந்திறந்த வாயி லடைத்ததா லண்ணல்,
நிறந்திறந்த நீளிலை வேல்" (பு. வெ.
80).
2"உலமரு நெஞ்சி னொட்டா மன்னவ
ரூர்ந்த யானை, வலமருப் பீர்ந்து
செய்த மணிகிளர் கட்டில்" (சீவக.
2566)
|