5
|
சாந்துபுலர்ந்த
வியன்மார்பிற்
றொடிசுடர் வரும் வலிமுன்கைப்
புண்ணுடை யெறுழ்த்தோட் புடையலங் கழற்காற்
பிறக்கடி யொதுங்காப் பூட்கை யொள்வாள்
ஒடிவி றெவ்வ ரெதிர்நின் றுரைஇ |
10
|
இடுக
திறையே புரவெதிர்ந் தோற்கென
அம்புடை வலத்த ருயர்ந்தோர் பரவ
அனையை யாகன் மாறே பகைவர்
கால்கிளர்ந் தன்ன கதழ்பரிப் புரவிக்
கடும்பரி நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடி |
15
|
புலவரைத்
தோன்றல் யாவது சினப்போர்
நிலவரை நிறீஇய நல்லிசைத்
தொலையாக் கற்பநின் றெம்முனை யானே. |
துறை
- வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் - ஒழுகு
வண்ணம். தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். பெயர் - புண்ணுடை
யெறுழ்த்தோள் (7)
(ப
- ரை) 2. கணங்கொள்ளவெனத் திரிக்க. அவரென்றது பகைவரை.
7. புண்ணுடை எறுழ்த்தோளென்றது எப்பொழுதும் பொருது புண்ணறாத வலிய
தோளென்றவாறு.
இச்சிறப்பானே
இதற்கு, 'புண்ணுடை யெறுழ்த்தோள்' என்று
பெயராயிற்று.
10. புரவெதிர்ந்தோற்கென்றது
கொடையேற்றிருக்கின்ற அவனுக்கென்ற
வாறு.
கொடி (14) தோன்றல்
(15) என்றதனை எழுவாயும் பயனிலையுமாகக்
கொள்க.
நின் தெம்முனைப்
(17) புலவரையான் (15) என மாறிக் கூட்டுக.
தொலையாக்கற்ப
(17), நின் வீரராகிய உயர்ந்தோர் (11)
நின்தெவ்வராகிய அவருடைய (2) களிற்றியானை (1) மலையிற் கணங்கொள்ளா
நிற்க (2), முரசம் (3) கடிதுமுழங்கா நிற்க (4) அவையிற்றை ஒன்றும் மதியாதே
நின்னொடு ஒடிவில் தெவ்வராகிய அவர் எதிர்நின்று பெயரா (9)
இப்புரவெதிர்ந்தோனுக்குத் திறையையிடுகவெனச் சொல்லி நின்னைப் (10)
பரவும்படி நீ (11) அதற்கேற்ற தன்மையையுடைய யானபடியாலே (12)
நின்தெம்முனைப் (17) புலவெல்லையில் நின் (15) பகைவர் (12) தேர்
மிசைக்கொடி (14) போரைக் குறித்துத் தோன்றல் யாவது (15) எனக் கூட்டி
வினை முடிவு செய்க.
இதனாற் சொல்லியது,
அவன் கொடைச்சிறப்போடு படுத்து வென்றிச்
சிறப்புக் கூறியவாறாயிற்று.
|