8
- 9. நின் செல்வம் இனிது; யாது இனிதெனிற் பல்புகழ் கேட்டற்கு
இனிதென முடிவுகொள்க.
9. கேட்டொறு மென்பதற்கு அச்செல்வத்தையென வருவிக்க.
21. நூலாக்கலிங்கமென்றது ஒருவர் நூலாநூலாகிய பட்டுநூல்
முதலாயவற்றாற் செய்த கலிங்கமென்றவாறு.
நூலாமை யென்னும் தொழில் கலிங்கத்துக்குச் சினையாகிய நூல்
மேலதாலெனின், அச்சினையோடு முதற்குள்ள ஒற்றுமைபற்றிச் சினை
வினையை முதல்மேலேற்றி வழுவமைதியாற் கூறினானென்க. இனி நூலாநூற்
கலிங்கமென்பான் நூலென்பதனைத் தொகுத்துக் கூறினானென்பாரும் உளர்.
25. நுகர்தற்கு இனிது நின் பெருங்கலிமகிழ்வே யென்றது நின் பெரிய
ஆரவாரத்தையுடைய 1ஓலக்கத்துச் செல்கின்ற வினோத மகிழ்ச்சி
அனுபவித்தற்கு இனிதென்றவாறு.
வேந்தே (3), நின்செல்வம் (9) புகழ் (8) கேட்டற்கினிது (9), நின்
பெருங்கலி மகிழ்வு நுகர்தற்கினிது (25) என வினைமுடிவு செய்க.
இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்பும் அவனது ஓலக்க
வினோதச் சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று.
(கு - ரை) 1 - 3. வயவர் வீழ - வீரர்கள் இறந்துபட. வாள்
அரில்
மயக்கி - வாள்வீரரது நெருக்கத்தைக் கலக்கி (பதிற். 36 : 6). இடம் கவர் -
தனக்குரிய இடத்தைக் கவர்ந்த. கடும்பின் அரசு - மந்திரி முதலிய
சுற்றத்தையுடைய பகையரசர். பனிப்ப - நடுங்க. கடம்பு முதல் - கடம்பின்
அடிமரத்தை; கடம்பைத் தடிந்தது: பதிற்.11:
12 - 4, குறிப்புரை.
மயக்கி, பனிப்ப, தடிந்த வேந்தே.
4 - 9. தார் பிடரிமயிர் போலும். எருத்து - கழுத்து. வாரல் நீட்சி.
அரிமான் - சிங்கம். பிறமான் - யானை முதலிய வேறு விலங்கினங்கள்.
தோடு - தொகுதி. நெடுநகர் - பகைவருடைய பெரிய நகரங்கள். துயிலீயாது
- தூங்காமல். மாதிரம் - திசைகளில். மறம் வீங்கு பல்புகழ் - வீரத்தின்
மிகுதியால் வந்த பல புகழ். சேரனுக்குச் சிங்கமும் பகையரசருக்குப் பிற
விலங்கினங்களும் உவமை. மறம் வீங்கு பல் புகழ்: "வென்றிப் பல்புகழ்"
(மலைபடு.
544); "மறப்புகழ் நிறைந்த மைந்தினோன்" (புறநா.
290
: 6)
9 - 10. நின் செல்வத்தைக் கேட்குந்தோறும் அதனைக் காண்கின்ற
விருப்பத்தோடு.
10 - 13. குளவி - காட்டு மல்லிகையையுடைய. பைம் மயிரும் நடையும்
களிற்றுக்கு அடை. அரி ஞிமிறு - கோடுகளையுடைய வண்டுகள்; களிறு,
பிடியைச் சுற்றிய வண்டுகளை ஓட்டியது. குளவியையும் பிடிகளையும் உடைய
குன்று.
14 - 20. அவண் - சேரனது முன்னிலையை. இரும்பேரொக்கல்
- வறுமையால் கரிய பெரிய சுற்றத்தார் (சிறுபாண்.
139, ந.). ஒக்கலது
பழங்கண் என்க; பழங்கண்-துன்பம். தொல் பசி - தொன்றுதொட்டு வந்த பசி
(பெரும்பாண்.
25). எஃகு - இங்கே அரிவாள்; அரிவாளால் பிளந்து அறுத்த
வெள்ளிய நிணத்தோடு சேர்ந்த கொழுவிய துண்டாகிய ஆட்டின் மாமிசம்;
1ஓலக்கம்
- அரசிருக்கைக்குரிய இடம். செல்கின்ற - நடந்து வருகின்ற.
வினோதம் - பொழுதுபோக்கு.