பக்கம் எண் :

232

தன்னிறங் கரந்த வண்டுபடு கதுப்பின்
ஒடுங்கீ ரோதி யொண்ணுத லணிகொளக்
கொடுங்குழைக் கமர்த்த நோக்கி னயவரப்
 30 பெருந்தகைக் கமர்ந்த மென்சொற் றிருமுகத்து
மாணிழை யரிவை காணிய வொருநாட்
பூண்க மாளநின் புரவி நெடுந்தேர்
முனைகை விட்டு முன்னிலைச் செல்லாது
தூவெதிர்ந்து பெறாஅத் தாவின் மள்ளரொடு
 35 தொன்மருங் கறுத்த லஞ்சி யரண்கொண்டு
துஞ்சா வேந்தருந் துஞ்சுக
விருந்து மாக நின்பெருந் தோட்கே.

     துறை - முல்லை. வண்ணம் - ஒழுகுவண்ணம். தூக்கு -
செந்தூக்கு. பெயர் - நிழல்விடு கட்டி
(16)

     (ப - ரை) 2. கமஞ்சூல் - மேகங்கள்; நிறைந்த சூலுடைமையின்
மேகங்கள் கமஞ்சூலெனப்பட்டன.

     4. சிலையொடு கழறியென ஒடு விரிக்க; சிலை - முழங்குதல். கழறல் -
இடித்தல். நிவந்து விசும்பு அடையூவென மாறிக்கூட்டுக; விசும்படைதல் -
மலையிலே படிந்தவை எழுந்து விசும்பை அடைதல்.

     5. காலை இசைக்கும் பொழுதோடு புலம்புகொளவென்றது மேகங்கள்
கார்காலத்தை அறிவிக்கின்ற பருவத்தானே வருத்தம் கொள்ளா
நிற்கவென்றவாறு.

     புலம்புகொள (5) வயவர் (9) வியலறைக் கொட்ப (14) என முடிக்க.

     9. வாயில் கொள்ளா மைந்தினரென்றது தமக்குக் காவலடைத்த
இடங்களைச் சென்று கைக்கொள்ளா வலியினையுடையவரென்றவாறு.

     ஈண்டு, வாயில் - இடம்.

     10. மா இருங்கங்குலென்றது மிகவும் கரிய இராவென்றவாறு.

     கங்குலினும் 10) கொட்ப (14) என முடிக்க.

     11. தோள்பிணி மீ கையரென்றது குளிராலே தோளைப்பிணித்த
அத்தோள்மீது உளவாகிய கைகளையுடையாரென்றவாறு.

     12. முடிதல்வேட்கையரென்றது தாம் எடுத்துகெ்காண்ட போர்
முடிதலிலே வேட்கையையுடையாரென்றவாறு.

     15. நாடு அடிப்படுத்தலிற் கொள்ளை மாற்றியென்றது நாட்டை
அடிப்படுத்தினபடியாலே அடிப்படுத்தும் காலத்து உண்டாய்ச் சென்ற
கொள்ளையை மாற்றியென்றவாறு.

     16. அழல்வினையமைதல் - ஓட்டறுதல்.

     இவ்விடைச்சிறப்பானே இதற்கு, ‘நிழல்விடு கட்டி’ என்று பெயராயிற்று.

     17. கட்டளைவலித்தல் - இன்னார் இன்னதனைப் பெறுகவென்று
தரங்களை நிச்சயித்தல். தானைக்கு உதவியென விரிக்க.