சாறு
அயர்ந்தன்ன (20) தீம்பிழி (21) என முடித்து விழாக்கொண்டாடினா
லொத்த இனிய மதுவெனவுரைக்க.
காரணி யாணர்த்
(20) தூம்பு (21) என்றது கருமையைப் பொருந்தின
அழகிய மூங்கிற்குழாயென்றவாறு.
25. பெருவாய்மலர்
- 1இருவாட்சி. 2பசும்பிடி - பச்சிலை. மகிழ்ந்து -
விரும்பிச்சூடியென்றவாறு.
26. மின் உமிழ்ந்தன்ன
சுடர் இழையென்றது மேகம் மின்களை
உமிழ்ந்தாற் போன்ற சுடர்களையுடைய இழையென்றவாறு.
முனை கைவிட்டு
முன்னிலைச் செல்லாது (33) துஞ்சா (36) என முடித்து,
நின்னோடு போர் செய்கையைக் கைவிட்டு நின்முன்னே வந்து வழிபட்டு
நிற்றலைச் செய்யமாட்டாமையால் துஞ்சாதவெனவுரைக்க.
34. தூ எதிர்ந்து
பெறாஅத் தா இல் மள்ளரொடென்றது முன்பு நின்
வலியொடு எதிர்த்துப் பின் எதிர்க்கப்பெறாத வலியில்லாத
மள்ளரொடென்றவாறு.
மள்ளரொடு (34)
துஞ்சா (36) என முடிக்க.
அண்ணல் (18),
நின் அரிவை காணிய (31) நின்தேர் (32) ஒருநாட் (31)
புரவிபூண்பதாகவேண்டும் (32); அதுதான் நின் அரிவைக்கே உடலாக
வேண்டுவதில்லை; அதனானே துஞ்சாவேந்தரும் துஞ்சுவார்களாக வேண்டும்;
அதுதான் நின் (36) பெருந்தோட்கு விருந்துமாக வேண்டும்; இவ்வாறு
இரண்டொரு காரியமாக இதனைச் செய்க (37) என வினைமுடிவு செய்க.
இதனாற்சொல்லியது
3காமவேட்கையிற்செல்லாத அவன் வென்றி
வேட்கைச்சிறப்புக் கூறியவாறாயிற்று.
இஃது அவனரிவை
4கற்புமுல்லையைப் பற்றி வந்தமையால், துறை
முல்ையைாயிற்று.
(கு
- ரை) 1-5. மழைக் காலத்தின் இயல்பு.
1-2. உலகத்தைப்
பாதுகாக்கும் அச்சம் பொருந்திய சிறப்பினையும், கரிய
நிறத்தையும், மின் முதலான தொகுதியையும் உடைய வளம் பொருந்திய
நிறைந்த நீரையுடைய மேகங்கள். கமஞ்சூல் மேகத்திற் காயிற்று.
3-4. மற்ற நான்கு
பூதங்கள் அகலுதற்குக் காரணமான பெரிய
ஆகாயத்தில் அதிர்தற்குக் காரணமான சினம் மிக்கு மிக்க முழக்கத்தோடு
இடித்து, மலையிலே படிந்து பின் எழுந்து ஆகாயத்தை அடைந்து. நிவந்து
விசும்பு அடையூ என மாறிக் கூட்டுக.
5. கார்காலத்தைத்
தெரிவிக்கும் பருவத்தால் வருத்தம் கொள்ளா நிற்ப.
6. ஆண்யானைகள் பரவிச் செல்ல விரைந்த கதியையுடைய குதிரைகளை
மேலாட்கள் வேண்டிய அளவிலே தடுத்துச் செலுத்த.
7. விளங்குகின்ற
கொடிகள் அசையும்படி தேர்கள் சுழன்று திரிய.
6-7. மு.
பதிற். 49 : 4-5.
8. தம் பகைவர்க்கு
உதவியான அரசர் பக்கத்தே வந்து தங்கினாலும்
நெஞ்சில் நடுக்கம் இல்லாதவராகித் திரிந்து. இது வயங்கலெய்திய
பெருமையின்பாற்படும் (தொல். புறத். 8)
1குறிஞ்சிப்.
94, ந.
2குறிஞ்சிப். 70,
ந.
3பதிற். 50,
உரை.
4பு. வெ.
283.
|