பக்கம் எண் :

234

     9-11. தமக்கு வரையறுத்த இடங்களைக் காவல் கொள்ளாத
வன்மையுடையராகி வீரர்கள், மிகவும் கரிய இரவிலும் சிறந்த வீரவளை
ஒளிவிடும்படி, குளிராலே தோளைப்பிணித்த அத்தோள்மீது உள்ள
கைகளையுடையராகிப் போரில் விருப்பம் மிக்கு. மாயிரு : ஒரு
பொருட்பன்மொழி. இதிற் கூறப்பட்டது கூதிர் பாசறை.

     11-2. நாள்தோறும், போர் விரைவில் முடிதலில் விருப்பமுடையராய்த்
தம் மேம்பாடுகளைக் கூறி, நெடிய மொழிதல், மாராயம்பெற்ற
நெடுமொழியாதலின் இவ்வீரர் அரசனால் எட்டி, காவிதி முதலிய பட்டங்களும்
நாடும் ஊரும் பெற்றோராவரென்றறிக. “நெடிய மொழிதலுங் கடியவூர்தலும்”
(நற். 210 : 5)

     13-4. கெடாத நல்ல புகழையுடைய தங்குடியின் பெருமையை நிலை
நிறுத்தும்பொருட்டு. அளவிடப்படாத எல்லையையுடைய அகன்ற பாசறையிலே
சுழன்று திரிய. இடா ஏணி : பதிற். 24 : 14, உரை ; “இடாஅவேணிநின்
பாசறை யானே” (பதிற். விடுபட்ட பாடல், 4 : 10). பாசறை அறையென
முதற்குறையாயிற்று (பதிற். 24 : 14, உரை)

     15. பகைவரது நாட்டை அடிப்படுத்தினமையால், முன்பு நிகழ்ந்த
கொள்ளையை மாற்றி.

     16-8. அழலிலே உருக்கினமையால் குற்றமற்ற ஒளிவிடுகின்ற
பொற்கட்டிகளுள், இன்னவர் இன்னதனைப் பெறுவாரென்று அவரவர்
தரங்களை நிச்சயிக்க, நினது சேனையிலுள்ள வீரர்க்கு உதவி, வேற்று
நாட்டினிடத்தே சென்று தங்கிய வெல்லும் போரைச் செய்யும் தலைவனே.

     19. முழவைப்போல வடிவம் அமைந்த பெரிய பலாப்பழத்தின்
சுளைகளை உண்டு; “கலையுணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்” (புறநா.
236 : 1) ; “கானப் பலவின் முழவுமருள் பெரும்பழம்” (மலைபடு. 511)

     20-21. விழாக் கொண்டாடினாற் போன்ற, கருமையை அணிந்த அழகிய
மூங்கிற்குழாயினிடத்தே முதிர்ந்த இனிய கள்ளையுண்டு. சாறயர்ந்தன்ன
தீம்பிழி என இயைக்க. “சாறுபடு திருவி னனைமகி ழானே” (பதிற். 65 : 17)

     மூங்கிற் குழாயில் தேனைவைத்து முதிரச் செய்தல் : முருகு. 195,
ஒப்பு. ; புறநா. 129: 2.

     22. காந்தட் பூவாலாகிய கண்ணியை அணிந்த செல்வத்தையுடைய
குடியிற் பிறந்த செல்வர். 23. ஆரவாரத்தையுடைய மகிழ்ச்சியையுடையவராகித்
தம்பால் வந்து இரப்போர்க்குக் கொடுக்கும்.

     24-5. வண்டுகள் ஒலிக்கின்ற சோலையையும் மிக்க மழையையும்
உடைய கொல்லிமலையில் உண்டான இருவாட்சிமலரோடு பச்சிலையை
விரும்பிச்சூடி.

     26. மேகம் மின்னலை உமிழ்ந்தாற் போன்ற ஒளிவிடுகின்ற
ஆபரணங்களை அணிந்த மகளிர் திரளையுடைய. கூந்தலுக்கு மேகமும்,
இழைகளுக்கு மின்னலும் உவமையாகக் கொள்க.

     27-8. தன்நிறம் மறைதற்குக் காரணமான வண்டுகள் ஒலிக்கின்ற
கூந்தலையும் சுருளையும் உடைய ஒளிபொருந்திய நெற்றி அழகு
கொள்ளும்படி. 29 - 31. வளைந்த காதணியோடு போர் செய்த
பார்வையையும், இன்பம் வரும்படி தன்பெருங்குணங்களுக்கு ஏற்பப்
பொருந்திய மென்மையான சொல்லையும், அழகியமுகத்தையும் உடைய,
மாட்சிமைப்பட்ட இழைகளை அணிந்த நின் தேவி காணும்படி, ஒரு நாளில்.