32.
நின்னுடைய குதிரைகள் நீண்ட தேரைப் பூண்பனவாகுக ; மாள :
முன்னிலையசைச் சொல் ; கலித். 124 :
19; புறநா. 146 : 11.
33. போரைக்
கைவிட்டு நின்முன்னே செல்லாமல்.
34. முதலில்
நின் வலியோடு மாறுபட்டுப் பின் எதிர்க்கப்பெறாத,
வன்மையில்லாத வீரரோடு.
35. பழையதாகிய
குலத்தை நீ அழித்தலை அஞ்சித் தம் அரண்களைப்
பாதுகாப்பாக எண்ணிக்கொண்டு.
36-7. தூங்காத
பகையரசரும் தூங்குக; நின்னுடைய பெருந்
தோள்களுக்கு விருந்தும் ஆகுக.
துஞ்சாவேந்தர்
: “வலமுறை வருதலு முண்டென் றலமந்து, நெஞ்சு நடுங்
கவலம் பாயத், துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே” (புறநா.
31 : 15 - 7)
செல்லாது (33)
மள்ளரொடு (34) துஞ்சா (36) என இயையும்.
(பி
- ம்) 7. நுடங்கல. 22, காந்தட்கண்ணி. 27. வண்டுபடு துப்பின். 32.
புனைவினை நெடுந்தேர். 34. தூவின்மள்ளரொடு. (1)
82.
|
பகைபெரு
மையிற் றெய்வஞ் செப்ப
ஆரிறை யஞ்சா வெருவரு கட்டூர்ப்
பல்கொடி நுடங்கு முன்பிற் செறுநர்
செல்சமந் தொலைத்த வினைநவில் யானை |
5 |
கடாஅம்
வார்ந்து கடுஞ்சினம் பொத்தி
வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந் தியல
மறவர் மறல மாப்படை யுறுப்பத்
தேர்கொடி நுடங்கத் தோல்புடை யார்ப்பக்
காடுகை காய்த்திய நீடுநா ளிருக்கை |
10
|
இன்ன
வைகல் பன்னா ளாகப்
பாடிக் காண்கு வந்திசிற் பெரும
பாடுநர், கொளக்கொளக் குறையாச் செல்வத்துச் செற்றோர்
கொலக்கொலக் குறையாத் தானைச் சான்றோர்
வண்மையுஞ் செம்மையுஞ் சால்பு மறனும் |
15
|
புகன்றுபுகழ்ந்
தசையா நல்லிசை
நிலந்தரு திருவி னெடியோய் நின்னே. |
துறை
- காட்சி வாழ்த்து. வண்ணம் - ஒழுகுவண்ணமும்
சொற்சீர்வண்ணமும். தூக்கு - செந்தூக்கு. பெயர் - வினைநவில்
யானை (4)
|