பக்கம் எண் :

236

     (ப - ரை) 1. பகை பெருமையின் தெய்வம் செப்பவென்றது நின்மனத்து
அவரோடு பகைத்தன்மை பெரிதாகையானே நின்பகைவர் நின்னை யஞ்சித்
தாம் தாம் வழிபடும் தெய்வத்தைத் தத்தமக்குக் காவலென்று
சொல்லவென்றவாறு.

     செப்ப (1) அஞ்சா (2) என முடிக்க.

     2. ஆர் இறை அஞ்சாக் கட்டூரென்றது வீரர் அரிதாக இறுத்தலை
யஞ்சாத பாசறையென்றவாறு.

     பல்கொடி நுடங்கும் (3) யானை (4) என முடிக்க.

     4. வினை நவில் யானையென்றது முன்பே போர்செய்து பழகின யானை
யென்றவாறு.

     இச்சிறப்பானும் முன்னின்ற அடைச்சிறப்பானும், இதற்கு, ‘வினைநவில்
யானை’
என்று பெயராயிற்று.

     பிடி புணர்ந்து இயல (6) என்றது அவ்வினைநவில் யானை (4) கடாம்
வார்ந்து கடுஞ்சினம்பொத்தி (5) அச்சினத்திற்கேற்பப் போர் பெறாமையிற்
பாகர் அதன்சினத்தை அளவுபடுத்தற்குப் பிடியைப் புணர்க்கையான்,
அப்பிடியோடு புணர்ந்தும் போர்வேட்டுத் திரியவென்றவாறு.

     7. மாப் படை உறுப்பவென்றது இன்ன பொழுது போர்நிகழுமென்று
அறியாமையின், குதிரைகள் கலனைக்கட்டி நிற்கவென்றவாறு.

     மாவைப் படையுறுப்பவென விரித்தலுமாம்.

     8. தேர் கொடி நுடங்கவென்றது தேர் போர்குறித்துப் பண்ணி நின்று
கொடி நுடங்கவென்றவாறு.

     தோல் புடை ஆர்ப்ப வென்றது தோல்களும் முன்சொன்னவற்றின்
புடைகளிலே போர்குறித்த நாளிடத்து ஆர்ப்பவென்றவாறு.

     இயல (6) மறல உறுப்ப (7) நுடங்க ஆர்ப்ப (8) என்னும் ஐந்தினையும்
பன்னாளாக (10) என்னும் வினையொடு முடிக்க.

     9. காடு கைகாய்த்தியவென்றது பாசறையிருக்கின்ற நாள் குளிர்
நாளாகையால் விறகெல்லாமுறித்துத் தீக்காய்ந்தவென்றவாறு.

     காட்டையென இரண்டாவதனை விரித்து அதனைக்
காய்த்தியவென்பதனுட் போந்த பொருண்மையொடு முடிக்க.

     9-10. நீடுநாளிருக்கையையுடைய இன்ன வைகலென இரண்டாவது
விரிக்க. 10. இன்ன வைகலென்றது இப்பெற்றியையுடைய பாசறையிருக்கின்ற
நாட்களென்றவாறு.

     12-3. செற்றோர் கொலக் கொலக் குறையாத் தானையென்றது பகைவர்
போருட் கொல்லக் கொல்லக் குறைபடாத தானையென்ற அதன் பெருமை
கூறியவாறு.

     15. புகன்று புகழ்ந்தென்பதனைப் புகன்று புகழவெனத் திரிக்க. அசையா
நல்லிசை - கெடா நல்லிசை.

     புகழ்க்காரணமாகிய வண்மை முதலிய குணங்களைச் (14) சான்றோர் (13)
புகன்று புகழ்கையாலே கெடாது நின்ற நல்ல புகழ் (15) எனக்கொள்க.

     நெடியோய் (16), பெரும (11), கட்டூரிடத்தே (2) நீடுநாளிருக்கை (9)
இன்ன வைகல்தான் பன்னாளானபடியானே (10) நின்னைப் (16) பாடிக்காண்கு
வந்தேன் (11) எனக் கூட்டி வினை முடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.