(கு
- ரை) 1-9. சேரன் வாடைப் பாசறைக்கண்
இருத்தல்
கூறப்படும்.
1. நின்
மனத்தில் நின் பகைவரோடு பகையாந்தன்மை பெரிதாகையாலே
அவர் நின்னையஞ்சித் தாம் தாம் வழிபடும் தெய்வங்களைத் தத்தமக்குக்
காவலெனச் சொல்ல: “தொழுது விழாக் குறைக்குத் தொல்கடவுட் பேணி,
அழுது விழாக்கொள்வ ரன்னோ - முழுதளிப்போன், வாணாட் கோள் கேட்ட
மடந்தையர் தம்மகிழ்நர், நீணாட்கோளென்று நினைந்து” (தொல்.
புறத். 13,
ந. மேற்.) என்பதிலும் இக்கருத்து அமைந்துள்ளது. பகை பெருமையினென்னும்
பயனிலை பண்புகொள வருதலின்பாற்படும்.
2. நின் வீரர்
அரிதாக வந்து தங்குதலை அஞ்சாத, பகைவர்
அஞ்சுகின்ற பாசறையில் ; கட்டூர் ; பதிற்.
90 : 30 ; பு. வெ. 53.
3-6. யானையின்
இயல்பு.
4. வினைநவில்
யானை: பதிற். 40 : 31, 84 : 4 ; மதுரைக்.
47 ; நெடுநல். 169 ; மலைபடு
227 ; புறநா. 347 : 11.
3-4. பலகொடிகள்
அசைகின்ற, வன்மையினால் பகைவரது மிக்குச்
செல்கின்ற போர்களைத் தொலைத்த முன்னமே போர்செய்து பழகிய
யானைகள். நுடங்கு யானை, முன்பிற்றொலைத்த யானை எனக் கூட்டுக.
5-6. மதம் மிக்கு,
மிகுதியான கோபம் மூண்டு, வண்டுகள் ஒலிக்கின்ற
தலையையுடையனவாகித் தம் மதம் தணிதற்குப் பாகர் பெண் யானைகளைச்
சேர்ப்ப அவற்றோடு சேர்ந்திருந்தும் போரை விரும்பித் திரிய; “மிஞிறார்க்குங்
கமழ்கடாத், தயறுசோறு மிருஞ்சென்னிய, மைந்து மலிந்த மழகளிறு” (புறநா.
22 : 6-8)
7. வீரர் மாறுபட,
குதிரைகள் இன்னபோது போர் நிகழுமென்று
அறியாமையால் கலனை கட்டி நிற்க. 8. தேர் கொடிகள் நின்று அசைய,
கிடுகுபடைகளும் முன் சொன்னவற்றின் பக்கத்தே போர்குறித்து ஒலிப்ப.
9-10. குளிரின்
மிகுதியால் காட்டிலுள்ள மரங்களையௌல்லாம் விறகாக
எரித்துத் தீக்காய்ந்த, நீண்ட நாளாக இருத்தலையுடைய, இப்படிப்பட்ட
நாட்கள் பல ஆதலால் ; என்றது வாடைப்பாசறையைக் கூறியபடி.
11. பெருமானே,
நின்னைப் பாடிக் காண்பேன் வந்தேன்.
நின்னைப் (16)
பாடி (11) என இயைக்க.
12. புறநா.
70 : 7.
12-3. நின்னைப்
புகழ்ந்து பாடுவோர் கொள்ளக் கொள்ளக் குறையாத
செல்வத்தையும் பகைவர் போர்கள்தோறும் கொல்லக் கொல்லக் குறையாத
சேனையையும். 16 :தொல். பாயிரம்;
சிலப். 28:3.
13-6. அறிவான்
அமைந்தோர், கொடையையும் நடுவுநிலையையும்
சால்பையும் வீரத்தையும் விரும்பிப்புகழ்தலால், கெடாத நல்ல புகழையும்,
பகைவரது நிலத்தைக் கொள்ளுகின்ற போரால் வரும் செல்வத்தையும்
உடைய நெடியோய். புகழ்ந்து - புகழ ; எச்சத்திரிபு. நிலந்தரு திரு -
விளைவெனினுமாம் (சிலப். 15 :
1, அரும்பத.)
வண்மை முதலிய
குணங்கள் புகழுக்குக் காரணமாயின.
|