பக்கம் எண் :

240

  விண்டு முன்னிய புயனெடுங் காலைக்
கல்சேர்பு மாமழை தலைஇப்
பல்குரற் புள்ளி னொலியெழுந் தாங்கே.

     துறை - வாகை. வண்ணமும் - தூக்கும் அது. பெயர் -
தொழினவில் யானை
(4)

     (ப - ரை) எடுத்தேறு ஏவிய (1) முரசம் (2) என முடிக்க.

     கடிப்பென்பது (1) கடியெனக் கடைக்குறைந்தது. புடையானென உருபு
விரிக்க.

     3. முழக்கினுமென்ற உம்மை முரசினது கண்ணின் அதிர்ச்சியிலே யன்றி
அதனொடொத்த மழை முழக்கினுமென 1எச்சவும்மை.

     4. தொழில் நவில் யானையென்றது போர்க்குரிய யானையென்று
எல்லாராலும் சொல்லப்படுகின்ற யானையென்றவாறு.

     இச்சிறப்பானும் முன்னின்ற அடைச்சிறப்பானும் இதற்கு, ‘தொழினவில்
யானை’
என்று பெயராயிற்று.

     5. பார்வற்பாசறை யானை (4) தரூஉம் (5) என மாறிக்கூட்டி மாற்றாரது
காவற்பாசறையில் புக்கு அவ் யானைகளைக் கொண்டுபோது மென்றவாறு. 7.
சவட்டுதல் - உருவழித்தல்.

     9. பரந்தனவென்பது பரந்தவென நின்றது.

     12. கவர்தல் - அகப்படுத்தல்.

     முளை மூங்கிற் (12) களிறு (11) கால் கவர் கிளைபோல (12) நின்
உடற்றியோர் உய்தல் யாவது (13) என மாறிக் கூட்டி, முளையான மூங்கிலிற்
களிறு காலால் அகப்படுத்தப்பட்ட கிளை உய்யாதன்றே; அஃது
அழிந்தாற்போல நின்னை உடற்றியோர் உய்தல் கூடாதெனவுரைக்க.

     15. நுவலவென்றது படையையுற்றுப் போர்செய்கவென்றுசொல்ல
வென்றவாறு. 16. நோய்த் தொழில் மலைந்தவென்றது நோய்த் தொழிலாகிய
போரை 2ஏறட்டுக்கொண்டவென்றவாறு.

     வேலீண்டழுவமென்றது மாற்றார் படைப்பரப்பினை.

     19. காஞ்சி சான்றவென்றது நிலையாமை அமைந்தவென்றவாறு.

     20. குவவு - படைக்குழாம். குரைத்தல் - ஆரவாரித்தல்.

     செருப்பல செய்து (19) குரைத்த (20) என முடிக்க.

     21. காலைமாரியென்றது மாரியிற் பெய்யும் பெயலினை.

     தொழிலாற்றியென்றது உழவுத்தொழின்முதலாய தொழில்களைச்
செய்வித்தென்றவாறு.

     கல் சேர்பு மாமழை தலைஇ (23) என்றது, பண்டு ஒருகாலம் பெய்து
ஆற்றி (21) வரைக்கட் போயின புயல் நெடுங்காலம் பெய்யாத நிலைமைக்
கண்ணே பின்பு பெய்வதாகக் (22) கல்லைச் சேர்ந்து மழை பெய்ய (23)
என்றவாறு.

     தலைஇயென்பதனைத் தலையவெனத் திரிக்க.


     1சிறப்பும்மையென்றும் பிரதிபேதமுண்டு.
     2பதிற். 69 : 15, உரை.