பூழியர்
கோவே, பொறைய (6), முன்ப (7), பகைப்புலத்து (9)
ஆரெயில்கள் எண்ணுவரம்பறியா (8); பன்மா பரந்தன; ஆகையால்,
பகைப்புலம் நமக்கு வெலற்கு அரியதொன்றென்று எண்ணாது (9) நீ ஆண்டு
வல்லுநையானபடியை முன்பு அறியாது (10) நின்னை உடற்றியோர் இன்று
போர்செய்து அதனை (13) அறிந்தாராயினும் அவர் நின்னொடு (10) உடன்று
எழுந்து உரைஇ அதனையே பின்னும் அறிவதல்லது நின்னை வணங்கல்
அறிகின்றலர் ; இனி அவர் (14) முளை மூங்கிலிற் கால்கவர் கிளைபோல
அழிவதல்லது (12) உய்யவுங் கருதுவது யாவது (13)? நெடுங்காலம் பெய்யாத
(22) மழை பெய்தவழிப் (23) பல குரலையுடைய புள்ளின் ஒலியெழுந்தாற்போல,
நெடுங்காலம் போர் செய்யாதுநின்று (24) அவ்வுடற்றியோர் (13) வேலீண்டு
அழுவத்துச் (16) சான்ற செருப்பலசெய்து நின் (19) பல படைக்குழாம்
ஆரவாரிக்கின்ற இருப்பினை யாம் இனிது கண்டேம் (20) என மாறிக் கூட்டி
வினைமுடிவு செய்க.
‘உடன்றெழுந்
துரைஇ வணங்க லறியார்’ (14) என்பது, ‘அறிந்தன
ராயினும்’ (10) என்பதன்பின் நிற்கவேண்டுதலின் மாறாயிற்று.
இதனாற் சொல்லியது
அவன்வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1-2. எடுத்து எறிதலை ஏவிய குறுந்தடியின் புடைத்தலால்
ஒலிக்கும், தோலாற் போர்த்தலுற்ற முரசம் தன் அடிக்குமிடம்
அதிர்ந்தாற்போல. குலையலங்கு காந்தள் குலையலங்காந்தள் (கலித்.
40 : 12)
எனவும், தழங்குகுரல் (சீவக. 40) எனவும்
வந்தவற்றைப்போலக் கடிப்புப்
புடை யென்றது கடிப்புடையென வந்தது.
3. கார்காலத்து
மேகம் முழக்கத்தைச் செய்தாலும் கட்டுத்தறியினிடத்தே
கட்டியிருத்தலே யறுத்து.
2-3. மேக முழக்கத்திற்கு
முரசொலி : “கடிப்பிகு முரசின் முழங்கி
யிடித்திடித்துப், பெய்தினி வாழியோ பெருவான்” ‘வென்றெறி முரசினன்பல
முழங்கிப், பெயலா னாதே வானம்” (குறுந்.
270 : 3-4, 380 : 2-3);
“இருங்கிளைக் கொண்மூ................... போர்ப்புறு முரசி னிரங்கி” (அகநா.
188 : 1 - 3)
4. நெற்றியை
மேலே தூக்கி எழுகின்ற, போர்செய்து பழகிய
யானைகளையும்.
5-6. பகைவரைப்
பார்த்தற்குரிய பாசறையிடத்தே தருகின்ற பல
வேற்படையையும் உடைய, பூழிநாட்டார்க்குத் தலைவனே, பொன்னாலியன்ற
தேரையுடைய சேரனே. ‘பார்வற் பாசறை - அரண்களையுடைய பாசறை ;
பார்வல் - ஆகுபெயர்’ (மதுரைக்.231,ந.)
7. பகைவரான
மக்கட்டொகுதியை உருவமழித்த யமனைப் போன்ற
வன்மையையுடையாய் ; சவட்டி : “வம்ப வடுகர் பைந்தலை சவட்டி” (அகநா.
375 : 14). கூற்றமுன்ப : “நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்,
கூற்றுவெகுண் டன்ன முன்பொடு, மாற்றிரு வேந்தர் மண்ணோக் கினையே”
(புறநா. 42 : 22 - 4)
8-9. கொடிகள்
அசைகின்ற அரிய மதில்களை எண்ணின் எல்லை
அறியப்படா ; பல மாக்கள் பரந்தன! பகைப்புலம் நம்மால் வெல்லுதற்கு
அரியது ஒன்றென்று எண்ணாமல். பரந்த: பரந்தனவென்பது அன்பெறாது
வந்தது ; “கானந் தகைப்ப செலவு” (கலித்.
3 : 22) என்புழிப்போல.
|