10.
நீ வன்மையுடையை யாதலை முன்பு அறியாமல் நின்னோடு
போர்செய்து பின்பு அதனை அறிந்தாராயினும்.
11-4. அப்பகைவர்
நின்னோடு மாறுபட்டுப் போர் செய்யப் புறப்பட்டு
உலாவிப் பின்னும் நின்வன்மையை அறிவதல்லாமல் அவர் நின்னை
வணங்குதலை அறியார் ; நீண்ட மேகத்தின் முழக்கத்தைப் போல இளைய
ஆண்யானை வன்மை மிக்குக் காலால் முளைத்த மூங்கிலினது
அகப்படுத்தப்பட்ட கிளைபோல அழிவதல்லாமல் அவர் தப்புதல்
எங்கேயுள்ளது? “முளைவளர் முதல மூங்கின் முருக்கிக், கிளையொடு
மேய்ந்த கேழ்கிளர் யானை” (அகநா. 332
: 1 - 2) ; “கழைதின் யானைக்
காலகப் பட்ட, வன்றிணி நீண்முளை போலச் சென்றவண், வருந்தப் பொரேஎ
னாயின்” (புறநா. 73 : 9 - 11)
அறிந்தனராயினும்
(10) உடன்று எழுந்து உரைஇ வணங்கல் அறியார்
(14) ; நின் உடற்றியோர் (13) மழகளிறு (11) கான்முளை மூங்கிற் கவர்கிளை
போல (12) உய்தல் யாவது (13) என இயைக்க.
15. தோலாற்
போர்த்தலுற்ற ‘தண்ணுமை ஒலித்தல் மிக்குப்
படையையுற்றுப் போர் செய்கவென்று சொல்ல; “ஏவல் வியன்பணை”
(பதிற். 39 : 5) என்பதன் உரையைப் பார்க்க.
16. துன்பத்தைச்
செய்யும் தொழிலாகிய போரை மேற்கொண்ட
மாற்றாரின் வேற்படைகள் நெருங்கிய படைப்பரப்பில். வேல் சிறந்த
படையாதலின் அதனைத் தலைமைபற்றிக் கூறினார்.
17. போரை விரும்புகின்ற
விருப்பத்தையும் நீங்காத வன்மையையுமுடைய
வீரரோடு.
18. இடி வீழ்த்திய
மலையைப்போலக் களிறுகள் நிலத்தில் விழ.
19. நிலையாமை
தம் நெஞ்சில் அமைந்த போர் பலவற்றைச் செய்து
(பதிற். 65 : 4). 19 - 20. நினது சேனைக்குழாத்தின்
ஆரவாரிக்கின்ற
இருப்பினைக் கண்டோம். வீரர் ஆர்த்தல் : குறுந்.
34 : 5, ஒப்பு.
21-2. பெய்யவேண்டும்
காலத்தில் மழையைப் பெய்து உழவுத்தொழில்
முதலான தொழில்களைச் செய்வித்து, மலையினிடத்தே போன மேகம் பின்னர்
நெடுங்காலம் பெய்யாத நிலைமையில். “மழைதொழி லுதவ” (மதுரைக்.
10)
23. பின்பு பெய்வதாக
மலையைச் சேர்ந்து மிக்க மழையைப்
பெய்தமையால். தலைஇ: தலைய எனத்திரிக்க. 24. பலவாக வேறுபட்ட
குரலையுடைய பறவைகளின் ஒலி எழுந்தாற்போல.
புள்ளின் ஒலி
எழுந்தாங்கு (24) நின் (19) குவவுக்கரை யிருக்கை இனிது
கண்டிகும் (20) என முடிக்க.
20-24. ஆரவாரத்திற்குப்
புள்ளொலி: “பல்வேறு புள்ளி னிசை யெழுந்
தற்றே, அல்லங் காடி யழிதரு கம்பலை” (மதுரைக்.
543-4); “கம்புட்
கோழியுங் கனைகுர னாரையும், செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும்,
கானக் கோழியு நீர்நிறக் காக்கையும், உள்ளு மூரலும் புள்ளும் புதாவும்,
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப், பல்வேறு குழுஉக்குரல் பரந்த
வோதையும்” (சிலப். 10 : 114-9)
(பி
- ம்) 9. புலமென்றெண்ணாது (4)
|