85.
|
நன்மரந்
துவன்றிய நாடுபல தரீஇப்
பொன்னவிர் புனைசெய லிலங்கும் பெரும்பூண்
ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்
இட்ட வெள்வேன் முத்தைத் தம்மென |
5
|
முன்றிணை
முதல்வர் போல நின்று
தீஞ்சுனை நிலைஇய திருமா மருங்கிற்
கோடுபல விரிந்த நாடுகா ணெடுவரைச்
சூடா நறவி னாண்மகி ழிருக்கை
அரசவை பணிய வறம்புரிந்து வயங்கிய |
10
|
மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின்
உவலை கூராக் கவலையி னெஞ்சின்
நனவிற் பாடிய நல்லிசைக்
கபிலன் பெற்ற வூரினும் பலவே. |
துறை
- செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும் அது.
பெயர் - நாடுகா ணெடுவரை (7)
(ப
- ரை) 3. ஒன்னாப் பூட்கை - பிறர்க்கு அப்படிச்செய்யப்
பொருந்தாத மேற்கோள். சென்னியர் பெருமானை யென்பதனுள், 1இரண்டாவது
விகாரத்தால் தொக்கது.
4. முத்தைத்
தம்மென - முன்னே தம்மினென; 2முந்தை முத்தையென
வலித்தது.
முதல்வர்போல
(5) அறம் புரிந்து வயங்கிய (9) என முடிக்க.
9-10. அறம்புரிந்து
வயங்கிய கொள்கையென்னாது மறம்புரி யென்றது
அறத்திற்கு இடையீடுபட வருவழி அதனைக் காத்தற்கு அவ்வறக்கொள்கை
மறத்தொடு பொருந்துமென்றதற்கு.
7. நாடுகாண்
நெடுவரையென்றது தன்மேல் ஏறி நாட்டைக் கண்டு
இன்புறுதற்கு ஏதுவாகிய 3ஓக்கமுடைய மலையென்றவாறு.
இச்சிறப்பானே
இதற்கு, ‘நாடுகாணெடுவரை’ என்று பெயராயிற்று.
8. 4சூடாநறவு
: மதுவிற்கு வெளிப்படை.
கொள்கையைப்
(10) பாடிய (12) என இரண்டாவது விரித்து முடிக்க.
5நனவிற்
பாடிய (12) என்றது வயங்கிய செந்நாவினாலும் (10) உவலை
கூராக் கவலையில் நெஞ்சினாலும் (11) மெய்ம்மையாற் பாடிய (12) என்றவாறு.
1உயர்திணைப்
பெயரிடத்து ஒழியாது வரவேண்டுமென்பது விதியாதலின்
இங்ஙனம் கூறினார்.
2இட்டவென்பதற்கேற்ப வலித்தல்
விகாரம் பெற்றது.
3ஓக்கம் - ஓங்குதல் : மலைக்குரிய
ஓங்கலென்னும் பெயர்ப்பொருள்
இங்கு அறியத்தக்கது.
4சூடப்படும் நறவம்பூவும் உண்மையின்
சூடாநறவு மதுவிற்கு ஆயிற்று.
5நனவு - மெய்ம்மை (புறநா.
41 : 11, உரை)
|