|
12-3. மெய்ம்மறையாற்
பாடிய நல்லிசையையுடைய கபிலனென்னும்
புலவர் பெற்ற ஊரினும் பல ஆகும். நல்லிசைக் கபிலன்: “வெறுத்த கேள்வி
விளங்குபுகழ்க் கபிலன்” (புறநா. 53:12).
கபிலன் பெற்ற ஊரென்றது செல்வக்
கடுங்கோ வாழியாதன் நன்றா வென்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற்
கண்ட நாடெல்லாம் காட்டிக்கொடுத்த ஊர்களை.
இட்டவேல் (4)
ஊரினும் பல (13) என முடிக்க. பகைவர் இட்ட வேல்
இன்ன பொருளினும் பல வென்றல்: “இன்முகங் கரவா துவந்துநீ யளித்த,
அண்ணல் யானை யெண்ணிற் கொங்கர்க் குடகட லோட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே” (புறநா.
130 : 4 - 7) (5)
86.
|
உறலுறு
குருதிச் செருக்களம் புலவக்
கொன்றமர்க் கடந்த வெந்திறற் றடக்கை
வென்வேற் பொறைய னென்றலின் வெருவர
வெப்புடை யாடூஉச் செத்தனென் மன்யான் |
5
|
நல்லிசை நிலைஇய நனந்தலை யுலகத்
தில்லோர் புன்கண் டீர நல்கும்
நாடல் சான்ற நயனுடை நெஞ்சிற்
பாடுநர் புரவல னாடுநடை யண்ணல்
கழைநிலை பெறாஅக் குட்டத் தாயினும் |
10
|
புனல்பாய்
மகளி ராட வொழிந்த
பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்
சாந்துவரு வானி நீரினும்
தீந்தண் சாயலன் மன்ற தானே. |
இதுவும்
அது. பெயர் - வெந்திறற் றடக்கை (2)
(ப
- ரை) 1. உறலுறுகுருதியென்றது நிலத்திலே உறுதல் மிக்க குருதி
யென்றவாறு.
‘உறலுறு’
(1) என்பது முதலாக முன்னின்ற அடைச்சிறப்பான் இதற்கு,
‘வெந்திறற் றடக்கை’ (2) என்று பெயராயிற்று.
5.
நிலைஇயவென்றது ஈண்டு வினையெச்சம்.
12.
வருவானியென்றது வினைத்தொகை. வானியென்பது ஓர்யாறு.
இளஞ்சேரலிரும்பொறையை
எல்லாரும் வெருவரச் (3) செருக்களம்
புலவக் (1) கொன்றமர்க்கடந்த தடக்கைப் (2) பொறையனென்று
சொல்லுகையாலே, (3) யான் அவனை வெப்பமுடையான் ஒருமகனென்று
முன்பு கருதினேன்; அஃது இப்போது கழிந்தது (4) ; அப்பொறையனாகிய
பாடுநர் புரவலன், ஆடுநடையண்ணல் யான் தன்னொடு கலந்திருந்தவழித்
தன்னாட்டு (8) வானியென்னும் யாற்றுநீரினும் (12) சாயலனாயிருந்தான்றான்
(13) எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
|