|
வெண்டலைச்
செம்புனலென முரண்படக் கூறியவாற்றானும் முன்னின்ற
அடைச்சிறப்பானும் இதற்கு, ‘வெண்டலைச் செம்புனல்’
என்று பெயராயிற்று.
செம்புனலென்றது
செம்புனலையுடைய யாற்றினை.
4. நிர்வழி
ஒய்யும் கரும்பெனக் கூட்டி நீரிடத்துச் செலுத்தும்
கரும்பென்க.
கரும்பென்றது
1கருப்பந்தெப்பத்தினை.
பல்வேற் பொறையன்
(5) வெண்டலைச் செம்புனலையுடைய யாற்றிற் (3)
செலுத்தும் கருப்பம்புணையினும் (4) அளித்தல்வல்லன் ; ஆதலால்,
அவன்பாலே (4) பாடினி செல்; செல்லின், நன்கலம் பெறுகுவை (1) எனக்
கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற் சொல்லியது
அவன் அருட்சிறப்புக் கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1. விறலி, சேரனிடத்தே சொல்லுவாயாக; சென்றால் நல்ல
ஆபரணங்களைப் பெறுவாய். மோ : முன்னிலையசை. நன்கலம் - முத்து
மாலை முதலியன.
2. சந்தனமரத்தோடும்,
அகிலோடும் பொங்குகின்ற நுரைகளைச் சுமந்து.
பூழில் - அகில் ; “சாத்த மரத்த பூழி லெழுபுகை” (ஐங்குறு.
212 : 1)
3-5. தெளிந்த
கடலை நோக்கிச் சென்ற நுரையாகிய வெள்ளிய
மேற்பரப்பையுடைய சிவந்த நீரையுடைய ஆற்றில் நீரினிடத்தே செலுத்தும்
கருப்பந்தெப்பத்தைக் காட்டிலும், பல வேற்படையையுடைய சேரன்
அளித்தல்வல்லன். நீர்வழி ஒய்யுமென மாறிக் கூட்டுக. வல்லனால் : ஆல்,
அசைநிலை. (7)
88.
|
வையக
மலர்ந்த தொழின்முறை யொழியாது
கடவுட் பெயரிய கானமொடு கல்லுயர்ந்து
தெண்கடல் வளைஇய மலர்தலை யுலகத்துத்
தம்பெயர் போகிய வொன்னார் தேயத் |
5
|
துளங்கிருங்
குட்டந் தொலைய வேலிட்
டணங்குடைக் கடம்பின் முழுமுத றடிந்து
பொருமுர ணெய்திய கழுவுள் புறம்பெற்று
நாம மன்னர் துணிய நூறிக்
கால்வல் புரவி யண்ட ரோட்டிச் |
10
|
சுடர்வீ
வாகை நன்னற் றேய்த்துக்
குருதி விதிர்த்த குவவுச்சோற்றுக் குன்றோ
டுருகெழு மரபி னயிரை பரைஇ
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக்
கொற்ற மெய்திய பெரியோர் மருக |
1“வேழ
வெண்புனை” (அகநா.
6 : 8)
|