பக்கம் எண் :

248

 15




வியலுளை யரிமான் மறங்கெழு குருசில்
விரவுக்கணை முழங்கு நிரைதோல் வரைப்பின்
உரவுக்களிறு வெல்கொடி நுடங்கும் பாசறை
ஆரெயி லலைத்த கல்கால் கவணை
நாரரி நறவிற் கொங்கர் கோவே
 20




உடலுநர்த் தபுத்த பொலந்தேர்க் குருசில்
வளைகடன் முழவிற் றொண்டியோர் பொருந
நீநீடு வாழிய பெரும நின்வயிற்
றுவைத்த தும்பை நனவுற்று வினவும்
மாற்றருந் தெய்வத்துக் கூட்ட முன்னிய
 25




புனன்மலி பேரியா றிழிதந் தாங்கு
வருநர் வரையாச் செழும்பஃ றாரம்
கொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப
ஓவத் தன்ன வுருகெழு நெடுநகர்ப்
பாவை யன்ன மகளிர் நாப்பட்
 30




புகன்ற மாண்பொறிப் பொலிந்த சாந்தமொடு
தண்கமழ் கோதை சூடிப் பூண்சுமந்து
திருவிற் குலைஇத் திருமணி புரையும்
உருகெழு கருவிய பெருமழை சேர்ந்து
வேங்கை விரிந்து விசும்புறு சேட்சிமை
 35




அருவி யருவரை யன்ன மார்பிற்
சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ
மாகஞ் சுடர மாவிசும் புகக்கும்
ஞாயிறு போல விளங்குதி பன்னாள்
ஈங்குக் காண்கு வந்தனென் யானே
 40


உறுகா லெடுத்த வோங்குவரற் புணரி
நுண்மண லடைகரை யுடைதரும்
தண்கடற் படப்பை நாடுகிழ வோயே.

     துறை - செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும்
அது. பெயர் - கல்கால் கவணை
(18)

     (ப - ரை) வையகம் மலர்ந்த தொழிலென்றது வையகத்திற் பரந்த
அரசர் தொழிலென்றவாறு.

     தொழின்முறை ஒழியாது (1) கொற்றமெய்திய (14) என முடிக்க.

     2. கடவுட் பெயரிய கானமென்றது விந்தாடவியை. கடவுளென்றது