|
ஆண்டு உறையும் 1கொற்றவையினை.
கடவுளினென விரிக்க. கல்லுயரவெனத்
திரிக்க.
12. அயிரையென்றது 2அயிரைமலையுறையும் கொற்றவையினை.
18. 3கல்
கால் கவணையென்றது கற்களைக் கான்றாற்போல
இடையறாமல் விடும் கவணென்றவாறு.
இச்சிறப்பானே
இதற்கு, ‘கல்கால்கவணை’ என்று பெயராயிற்று.
23. துவைத்த
தும்பையென்றது எல்லாராலும் புகழ்ந்து சொல்லப்பட்ட
தும்பைப்போரென்றவாறு.
4நனவுற்றுவினவும்
(23) தெய்வம் (24) என்றது அத்தும்பைப் போரை
நினக்கு வென்றி தருதற்கு மெய்ம்மையுற்று வினவும் கொற்றவையென்றவாறு.
தெய்வத்துக்
கூட்டமுன்னிய (24) யாறு (25) என்றது அத்தெய்வம்
கூடியுறைதலையுடைய அயிரைமலையைத் தலையாகக் கொண்டு ஒழுகப்பட்ட
யாறென்றவாறு. தெய்வம் கூடியுறைதலையுடைய அயிரை தெய்வத்துக்
கூட்டமெனப்பட்டது.
25. இழிதந்தாங்கென்றது
அவ்வியாறு மலையினின்று இழிந்தாற்
போலவென்றவாறு.
சிறப்ப (27)
விளங்குதி (38) என முடிக்க.
30. பொறியென்றது
உத்தம இலக்கணங்களை. பொறியோடு
சாந்தமொடுவென ஒடுவை இரண்டற்கும் கூட்டியுரைக்க. ஒடு: 5வேறு
வினையொடு. 31. கோதையென்றது முத்தாரத்தினை.
சூடிச் சுமந்து
(31) என்னும் வினையெச்சங்களை வரையன்ன (35)
என்பதனுள் அன்னவென்பதனொடு முடிக்க.
விற்குலைஇ (32)
வேங்கை விரிந்து (34) என்னும் வினையெச்சங்களைத்
திரித்து வில்குலவ வேங்கைவிரியத் திருமணிபுரையும் (32) உருகெழுகருவிய
பெருமழை சேர்ந்து (33) விசும்புறு சேட்சிமை (34) அருவியருவரை (35) என
மாறிக்கூட்டி, இதனை 6குறைவுநிலையுவமையில் வழுவமைதியாக்கிப் பொறிக்கு
வேங்கைப்பூ உவமமாகவும் கோதைக்குத் திருவில் உவமமாகவும் பூணிற்கு
அருவி உவமமாகவும் சாந்திற்கு உவமமில்லையாகவும் உரைக்க. இவ்வாறு
இடர்ப்படாது மலையை உரைப்பினும் அமையும்.
38. விளங்குதியென்பது
ஈண்டு முன்னிலையேவல்.
40. உறுகால்
எடுத்த புணரியெனக் கூட்டுக.
பெரியோர் மருக (14), மறங்கெழு குருசில் (15), கொங்கர் கோவே (19),
பொலந்தேர்க் குருசில் (20), தொண்டியோர் பொருந (21), பெரும (22),
சேயிழை கணவ (36), நாடுகிழவோய் (42), ஈங்கு நிற்காண்கு வந்தேன் (39);
நீ நீடு வாழ்வாயாக (22) ; பல தாரம் (26) கொளகொளக் குறையாமற் சிறப்ப
(27) மகளிர்நாப்பட் (29) பன்னாள் ஞாயிறுபோல விளங்குவாய் (38) என
மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க.
1
“விந்தியமலையிலுறைதல்பற்றித் துர்க்கைக்கு விந்தையென்று
ஒரு
பெயர் வழங்கும்.
2 பதிற். 3-ஆம்
பதிகம்; 79 : 18, 90 : 19.
3 “கல்லுமிழ் கவண்” (சிலப்.
15 : 208) என்பது பொறிவகைகளுள்
ஒன்று.
4 நனவு - மெய்ம்மை (பதிற்.
85 : 12, உரை.)
5 பொறிக்கும் சந்தனத்திற்கும்
தொழிலின்மையின் வேறுவினை
ஒடுவாயிற்று.
6 “மிகுதலுங் குறைந்தலு தாழ்தலு முயர்தலும்,
பான்மாறுபடுதலும்
பாகுபா டுடைய” (தண்டி, 32)
|