பக்கம் எண் :

25

துள்ள மழிய வூக்குநர் மிடறபுத்
துள்ளுநர் பனிக்கும் பாழா யினவே
 20 காடே கடவுண் மேன புறவே
ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன
ஆறே யவ்வனைத் தன்றியு ஞாலத்துக்
கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக்
குடிபுறந் தருநர் பார மோம்பி
 25 அழல்சென்ற மருங்கின் வெள்ளி யோடாது
மழைவேண்டு புலத்து மாரி நிற்ப
நோயொடு பசியிகந் தொரீஇப்
பூத்தன்று பெருமநீ காத்த நாடே.


      துறை - செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். பெயர் -
பூத்த நெய்தல் (3)

      
      (ப - ரை)
பிறழ்ந (1) எனவும் வித்துந (2) எனவும் தடுக்குந (4)
எனவும் ஆர்ந (6) எனவும் வந்தன. 1வினைப்பெயர்த் திரிசொல்.
     
      3 - 4. நெய்தல் எருமையின் நிரை தடுக்குநவுமென்றது நெய்தலானது
அக்கரும்பு முதலாய 2மற்றோரிரையின் பாங்கரிற் செல்லாது தன்னையே
நின்று தின்னும்படி தான் போதவுண்ட எருமை நிரையைத் தடுக்கும்
இடங்களுமென்றவாறு.
   
     இச்சிறப்பானே இதற்கு,
'பூத்த நெய்தல்' என்று பெயராயிற்று.

     6. மூதா ஆம்பலார்நவுமென்றது புறத்துப் போய் இரை 3 தெவிட்டாத
முதிய ஆக்கள் துணங்கையாடிய இடத்து நின்று (5) ஆம்பலையே தின்னும்
இடங்களுமென்றவாறு.

     என்றது பெருக ஆம்பல் சூடித் துணங்கையாடுவாரை உடையனவென
அவ்விடங்களின் செல்வச் சிறப்புக் கூறியவாறாயிற்று.

     7. இமிழ் மருதென்றதற்குப் புள்ளிமிழ் மருதென்று ஒரு பெயர்
வருவிக்க.
    
     8. புனல்வாயில் - 4வாய்த்தலை.

     1 - 10. ஒலிதெங்கென்னும் பெயர்க்கு முன்னின்ற பெயர்கள்
எண்ணும்மையோடு நின்றமையால் அவற்றையுடைய நாடென இரண்டாவதன்
தொகையாய், அச்சொல் (?)............அவற்றையெல்லாம் எழுவா


     1 வினைப்பெயர் - வினையாலணையும் பெயர்.

     2 “செலல் விலங்குதேன்" (தக்க. 360) என்பதும், 'தன்னை விட்டுப்
போகையை விலக்கும் தேன்' என்னும் அதன் உரையும் இதனோடு
ஒப்பிடற்பாலன.

     3 தெவிட்டாத - உண்டு அசைபோடாத. 'இரைதேர மாட்டாத'
என்றிருப்பின் நலம்.

     4 வாய்த்தலை - வாய்க்காலின் தலைப்பு; வாத்தலை என இப்பொழுது
வழங்கும்.