|
இதனாற்
சொல்லியது அவன் கொடைச் சிறப்பும் காமவின்பச் சிறப்பும்
உடன்கூறி வாழ்த்தியவாறாயிற்று.
(கு
- ரை) 1, பூமியில் பரவிய அரசர்க்கு உரிய தொழிலின் முறையில்
தவறாமல்.
2. விந்தையென்னும்
கடவுளால் பெயர்பெற்ற காட்டோடு
கல்லுயரும்படி ; கடவுளென்றது துர்க்கையை ; விந்தாடவி : “மஞ்சுசூழ்
நெடுவரை விஞ்சத் தடவி” (பெருங். 5. 3
: 52). உயர்ந்து - உயர; எச்சத்தி்ரிபு.
3-4. தெளிந்த
கடல் வளைந்த அகன்ற இடத்தையுடைய உலகத்தில் தம்
பெயர் திசைகளில் சென்ற பகைவர் அழியும்படி.
5. காற்றால்
அசைகின்ற பெரிய கடலரணினது வன்மை கெடும்படி
வேலை ஏற்றி நடப்பித்து; “வயங்குமணி யிமைப்பின் வேலிடுபு, முழங்கு
திரைப் பனிக்கடன் மறுத்திசி னோரே”, “கடலிகுப்ப வேலிட்டும்” (பதிற்.
45 : 21-2, 90 : 20). 6. தெய்வத்தன்மையையுடைய கடம்பமரத்தின் அடியை
வெட்டி (பதிற். 11 : 12-3, உரை)
7. போர் செய்தற்குக்
காரணமான வன்மையை அடைந்த
கழுவுளென்பான் புறங்கொடுத்து ஓடுதலைப்பெற்று. கழுவுள் ; பதிற்.
71 : 17,
உரை. 8. அச்சத்தையுடைய அரசர் உடல் துண்டாகும்படி அழித்து.
9. காலால் விரைந்து
செல்லுதலில் வல்ல குதிரைகளையுடைய
இடையரை ஒட்டி. 10. ஒளிவிடும் பூக்களையுடைய வாகையென்னும் காவல்
மரத்தையுடைய நன்னனை அழித்து. நன்னனும் வாகை மரமும்: பதிற்.
40 : 14-5, உரை. 12 : பதிற். 90 : 19.
11 - 2. பகைவரது
இரத்தத்தைத் தெளித்துக் கலந்த திரட்சியையுடைய
சோற்றின் பிண்டங்களால் அச்சம் பொருந்திய இயல்பினையுடைய
அயிரைமலையிலுள்ள துர்க்கையை வழிபட்டு. அயிரைமலையிலுள்ள துர்க்கை:
பதிற். 3-ஆம் பதிகம், 8; 79 : 17-8;
90 : 19. குருதி கலந்த சோற்றை
மடையாக அளித்தல்: பதிற். 30 : 37,79
: 16 - 7.
13-4. முடியுடைய
அரசரும் குறுநிலமன்னரும் வழிபட்டு வணங்கும்படி
வெற்றியை யடைந்த பெரியோரது வழியில் உள்ளாய்.
ஒழியாது (1)
எய்திய மருக (14) என முடிக்க.
15. அகன்ற பிடரிமயிரையுடைய
சிங்கத்தைப்போன்று வீரம் பொருந்திய
தலைவனே; “அரிமா வன்ன வணங்குடைத் துப்பின்” (பட்டினப்.
298)
16. ஒன்றோடொன்று
கலத்தலையுடைய முரசுகள் ஒலிக்கின்ற,
வரிசையாக அமைத்த கேடக வரைப்பினையும்.
17. உலாவுதலையுடைய
களிற்றினிடத்தே வெல்லும் கொடிகள் அசையும்
பாசறையையும்.
16-7.முழங்கும்
பாசறை, வரைப்பிற் பாசறை, நுடங்கும் பாசறையெனத்
தனித்தனியே இயைக்க.
18-9. பகைவரது
அரிய மதிலை வருத்திய கல்லைக் கக்கினாற்போல
வீசும் கவணையும், நாரால் அரிக்கப்பட்ட கள்ளையுமுடைய கொங்கு
நாட்டிலுள்ளார்க்குத் தலைவனே.
|