|
நாரரி
நறவு : பதிற். 11 : 15, உரை.
20. மாறுபடுவோரைக்
கெடுத்த, பொன்னாற் செய்த தேரையுடைய
தலைவனே. 21. வளைந்த கடலின் ஒசையாகிய முழவினையுடைய
தொண்டியென்னும் கடற்றுறைப் பட்டினத்துள்ளார்க்குத் தலைவ. ஐங்குறு.
171:3; புறநா. 17:13, 48:4.
பொருநன் - தான்
பிறர்க்கு உவமிக்கப் படுபவன். தொண்டி - மேல்
கடற்கரையிலுள்ளதும் சேரர்க்குரியதுமான ஓரூர்.
22. பெருமையை
யுடையாய், நீ நெடுங்காலம் வாழ்வாயாக.
22-4. நின்னிடத்து,
எல்லாராலும் புகழ்ந்து சொல்லப்பட்டதும்
பைப்போரில் மெய்ம்மையுற்று நினக்கு வெற்றி தருதற்கு வினவுகின்ற,
மாற்றுதற்கு அரிய துர்க்கையென்னும் தெய்வம் கூடிவாழ்தலையுடைய
அயிரைமலையினின்றும் தோன்றிய. 25. நீர்மிக்க பேரியாறு என்னும்
பெயரையுடைய ஆறு பூமியிலே இறங்கினாற்போல.
26. நின்பால்
இரத்தற்பொருட்டு வருவோர்க்கு எல்லையில்லாது
கொடுக்கும் செழுமையான பல பண்டம்.
27. கொள்ளக்
கொள்ளக் குறையாமல் இடந்தோறும் மிகும்படி.
28-9. சித்திரத்தைப்போன்ற
அழகையுடைய, பகைவர்க்கு அச்சம்
பொருந்திய நீண்ட அரண்மனையில், கொல்லிப்பாவையைப் போன்ற
வடிவழகையுடைய மகளிரது நடுவே (பதிற். 61
: 3 - 4)
சேரனுக்குச் சூரியனை
(38) உவம கூறினமையின் மகளிருக்கு
நெருஞ்சிப்பூவை உவமையாகக் கொள்க (பெருங்.
2. 4 : 14 - 5)
30. நூல்களிற்
சொல்லிய மாட்சிமைப்பட்ட மூன்று வரிகளோடும்,
விளங்கிய சந்தனத்தோடும்: “வரையகன் மார்பிடை வரியுமூன்றுள” (சீவக.
1462). சாந்தமொடு என்பதிலுள்ள ஒடுவைப் பொறியென்பதனோடும் கூட்டுக.
மார்பிற் பொறியும் சந்தனமும் : பதிற்.
48 : 11 - 2, உரை.
31. குளிர்ந்த
ஒளி பரவுகின்ற முத்தமாலையைச் சூடி, பேரணி
கலங்களை அணிந்து. கமழ்தல்: பரவுதல் என்னும் பொருளது;
“வியலிடங்கமழ, இவணிசை யுடையோர்க் கல்லது” (புறநா.
50 : 13-4)
என்புழிப்போல.
32-3. இந்திரவில்லை
வளைத்து அழகிய நீலமணியைப் போன்ற நிறம்
பொருந்திய, மின் முதலிய தொகுதிகளையுடைய பெரிய மேகம் சேரப்பெற்று.
32-5. திருவில்
தோற்றுதலும், திருமணி புரைதலும் மேகத்திற்குரியன.
மழை சேர்தலும், வேங்கை மலர்தலும். அருவியுடைமையும் மலைக்குரியன.
34-6. வேங்கைப்பூக்கள்
மலரப் பெற்று, ஆகாயத்தைப் பொருந்தும்
உயர்ந்த சிகரங்களையும், அருவிகளையும் உடைய அரிய மலையைப் போன்ற
மார்பினையுடைய, நெடுந்தூரத்தே விளங்குகின்ற நல்ல இசையையுடைய
சிவந்த ஆபரணங்களை அணிந்தோளுடைய கணவ. சேணாறு நல்லிசை :
மதுரைக். 209 ;
புறநா. 10 : 11. சேயிழை கணவ: அனைத்தும் ஒரு பெயர்.
37-8. பூமிக்கும்
சுவர்க்கத்துக்கும் நடுவேயுள்ள இடம் ஒளியடையும்படி,
பெரிய ஆகாயத்தில் உயர்ந்து செல்லும் சூரியனைப்போலப் பல காலம்
விளங்குவாயாக. மாகம் : பரி. 1:47, பரிமேல்.
|