பக்கம் எண் :

252

     39. யான் இவ்விடத்தே நின்னைப் காண்பேனாகி வந்தேன்.

     40-42. மிக்க காற்று எழுப்பிய ஓங்கிவருதலையுடைய அலை. நுண்ணிய
மணலையுடைய நீரையடைந்த கரையிடத்தே வந்து உடைகின்ற, குளிர்ந்த
கடற்பக்கத்தையுடைய நாட்டுக்கு உரியோய்.

     மருக (14), குருசில் (15), கோவே (19), பொலந்தேர்க் குருசில் (20),
பொருந (21), சேயிழை கணவ (36), யான் நின்னைக் காண்பேன் வந்தேன்
(39); சிறப்ப (27), மகளிர்நாப்பண் (29), ஞாயிறுபோல விளங்குதி (38) என
முடிக்க.

     (பி - ம்) 27. சிறந்து.                     (8)

89.



வானம் பொழுதொடு சுரப்பக் கானம்
தோடுறு மடமா னேறுபுணர்ந் தியலப்
புள்ளு மிஞிறு மாச்சினை யார்ப்பப்
பழனுங் கிழங்கு மிசையற வறியாது
 5




பல்லா னன்னிரை புல்லருந் துகளப்
பயங்கடை யறியா வளங்கெழு சிறப்பிற்
பெரும்பல் யாணர்க் கூலங் கெழும
நன்பல் லூழி நடுவுநின் றொழுகப்
பல்வே லிரும்பொறை நின்கோல் செம்மையின்
 10




நாளி னாளி னாடுதொழு தேத்த
உயர்நிலை யுலகத் துயர்ந்தோர் பரவ
அரசியல் பிழையாது செருமேந் தோன்றி
நோயிலை யாகியர் நீயே நின்மாட்
டடங்கிய நெஞ்சம் புகர்படு பறியாது
 15




கனவினும் பிரியா வுறையுளொடு தண்ணெனத்
தகர நீவிய துவராக் கூந்தல்
வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து
வாழ்நா ளறியும் வயங்குசுடர் நோக்கத்து
மீனொடு புரையும் கற்பின்
 20 வாணுத லரிவையொடு காணவரப் பொலிந்தே.

     துறை - காவன் முல்லை. வண்ணமும் தூக்கும் அது. பெயர் -
துவராக் கூந்தல்
(16)

     (ப - ரை) 4. மிசை அறவு அறியாமலெனத் திரிக்க.

     8. நடுவென்றது நடுவுநிலைமையை. 12. பிழையாமலெனத் திரிக்க.

     16. துவராக்கூந்தலென்றது எப்பொழுதும் தகரமுதலியன நீவுகையால்
ஈரம் புலராத கூந்தலென்றவாறு.