இச்சிறப்பானே
இதற்கு, ‘துவராக் கூந்தல்’ என்று பெயராயிற்று.
உறையுளொடு (15)
நெஞ்சம் புகர்படுபு அறியாது (14) என மாறிக் கூட்டி
அறியாதென்பதனை அறியாமலெனத் திரித்து அதனைப் புரையும் (19)
என்றதனோடு முடிக்க.
உறையுளொடு மீனொடுவென
நின்ற ஒடுக்கள் வேறுவினையொடு.
பல்வேலிரும்பொறை,
நின்கோல் செம்மையாலே (9), வானம் சுரப்பக்
கானம் (1) ஏறு புணர்ந்து இயலச் (2) சினையிற் புள்ளும் மிஞிறும் ஆர்ப்பப்
(3) பழனும் கிழங்கும் மிசையறவறியாதொழிய (4) ஆனிரை புல்லருந்துகளக்
(5) கூலம் கெழும (7) ஊழி நடுவுநின்று ஒழுக (8) நாடு தொழுதேத்த (10)
உயர்நிலையுலகத்து உயர்ந்தோர் பரவ (11) அரசியல் பிழையாதொழியாச்
செருவில் மேம்பட்டுத் தோன்றி (12) நீ (13) நின் அரிவையோடு பொலிந்து
(20) நோயிலையாகியர் (13) எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற் சொல்லியது
அவன் நாடுகாவற்சிறப்புக் கூறி
வாழ்த்தியவாறாயிற்று.
அவ்வாறு நாடுகாவல்
கூறினமையால், துறை 1காவன்முல்லையாயிற்று.
(கு
- ரை) 1. மேகம் உரிய காலத்தில் மழையைப் பெய்ய; பொழுதொடு
- பொழுதில் ; வேற்றுமைமயக்கம்.
1-2. காட்டில்
இனமாகப் பொருந்திய மடப்பத்தையுடைய பெண்மான்
ஆண்மானோடு கூடிச் செல்ல.
3. பறவைகளும்
வண்டுகளும் பெரிய மரக்கிளைகளில் ஆரவாரிப்ப;
மழை பெய்தபின் பறவைகள் ஒலித்தல் : பதிற்.
84:24.
4. பழங்களும்
கிழங்குகளும் உண்ணப்படுதல் அற்றுப்போதலை
அறியாமல்; என்றது இரண்டும் இடையறாது எப்பொழுதும்
உண்ணுதற்குரியனவாகிக் காலமல்லாத காலத்திலும் கிடைக்குமென்றபடி.
5. பலவாகிய
பசுக்களின் நல்ல தொகுதி புல்லை மேய்ந்து களிப்பால்
துள்ள ; ஆர்ந்தென்பது அருந்தெனக் குறுக்கல் விகாரம் பெற்றது;
‘உண்டார்ந்தென்பது உண்டருந்தெனக் குறுகி நிற்றலிற் குறுக்கும்
வழிக்குறுக்கல்’ (தொல். எச்ச. 7, சே.)
6-7. பயன் ஒழிதலை
அறியாத வளம்பொருந்திய சிறப்பினையுடைய
பெரிய பலவாகிய புதுவருவாயையுடைய பல தானியங்கள் நெருங்க.
8. நல்ல பலவான
ஊழிகள் நடுவுநிலைமையால் நிலைபெற்று நடப்ப;
“நல்லூழி யடிப்படர” (மதுரைக். 21). 9.
பலவாகிய வேற்படையையுடைய
இரும்பொறை, நினது ஆட்சி செவ்வியதாகையாலே.
9. பல்வே லிரும்பொறை
: “பல்வேன் மன்னன்” (மதுரைக். 234)
செங்கோற் சிறப்பால்
மழை தவறாமற் பெய்தல் முதலியன நிகழ்தல்
புறநா. 117.
10. நாள்தோறும்
நாள்தோறும் நாட்டிலுள்ளார் நின்னைக் கையால்
தொழுது நாவால் புகழும்படி. நாளினாளினென்பது, ‘நாட்டினாட்டி
னூரினூரின்” (குறுந். 130 : 3) என்பது போல
நின்றது.
1பு.
வெ. 178 - 9.
|