11.
உயர்ந்த நிலையையுடைய உலகத்திலுள்ள தேவர் புகழ; தேவர்
புகழ்தற்குக் காரணம் சேரநாடும் தம் உலகம்போல விளங்குதல்; “மாந்தரஞ்
சேர லிரும்பொறை யோம்பிய நாடே, புத்தே ளுலகத் தற்றெனக் கேட்டு
வந்து” (புறநா. 22 : 34-5) ; தமக்குச்
செய்யும் கடன்களை உரிய காலத்தே
குறைவின்றிச் செய்தலும் ஒரு காரணமாம்.
12-3. இராசதருமம்
தவறாமல் போரிலே மேம்பட்டுத் தோன்றி, நீ
நோயில்லை ஆகுக.
13-5. நின்னிடத்தே
ஒடுங்கிய மனம் குற்றப்படுதலை அறியாமல்
கனவின் கண்ணும் பிரியாத உறைதலோடு.
16. துவர்தல்
- உலர்தல் (குறிஞ்சிப். 60)
15-7. குளிர்ச்சி
யடையும்படி மயிர்ச்சாந்து தடவப்பட்ட, எப்பொழுதும்
ஈரம் புலராத கூந்தலையுடைய மணமகளிர் நோக்கினராய் மறுபடியும்.
18-20. வாழ்நாளை
அறிந்து கொள்ளுதற்குக் காரணமான விளங்குகின்ற
ஒளியை நோக்குதலையுடைய அருந்ததியோடு ஒத்த கற்பினையும், ஒளி
பொருந்திய நெற்றியையும் உடைய நின் தேவியோடு அழகுபொருந்த விளங்கி.
அரிவை: பருவப் பெயரன்று ; பெண்பாற் பெயர். அருந்ததியால் வாழ்நாளை
அறிதல்: “உலந்தநா ளவர்க்குத் தோன்றா தொளிக்குமீன் குளிக்குங் கற்பு”
(சீவக. 2141)
இரும்பொறை (9),
அரிவையொடு பொலிந்து (20) நீ நோயிலை ஆகியர்
(13) என முடிக்க.
(பி
- ம்) 9. இரும்பொறைகோஓல். 18. வாழுநாள். (9)
90. |
மீன்வயி
னிற்ப வானம் வாய்ப்ப
அச்சற் றேம மாகி யிருடீர்ந்
தின்பம் பெருகத் தோன்றித் தந்துணைத்
துறையி னெஞ்சாமை நிறையக் கற்றுக் |
5 |
கழிந்தோ
ருடற்றுங் கடுந்தூ வஞ்சா
ஒளிறுவாள் வயவேந்தர்
களிறொடு கலந்தந்து
தொன்றுமொழிந்து தொழில்கேட்ப
அகல்வையத்துப் பகலாற்றி |
10 |
மாயாப்
பல்புகழ் வியல்விசும் பூர்தர
வாள்வலி யுறுத்துச் செம்மை பூஉண்
டறன்வாழ்த்த நற்காண்ட
விறன்மாந்தரன் விறன்மருக
ஈர முடைமையி னீரோ ரனையை |
|