|
ஆறிய
கற்பிற் றேறிய நல்லிசை |
50 |
வண்டார்
கூந்த லொண்டொடி கணவ
நின்னாள், திங்க ளனைய வாக திங்கள்
யாண்டோ ரனைய வாக யாண்டே
ஊழி யனைய வாக வூழி
வெள்ள வரம்பின வாகென வுள்ளிக் |
55 |
காண்கு
வந்திசின் யானே செருமிக்
குருமென முழங்கு முரசிற்
பெருநல் யானை யிறைகிழ வோயே. |
துறை
- காட்சி வாழ்த்து. வண்ணம் - ஒழுகுவண்ணமும்
சொற்சீர்வண்ணமும். தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். பெயர்
- வலிகெழு தடக்கை (33)
(ப
- ரை) 2. அச்சமென்பது கடைக்குறைந்தது. இருள் - துன்பம்.
3. தோன்றி
இன்பம் பெருகவெனக் கூட்டுக.
3-4. தந்துணைத்
துறையென்றது பார்ப்பார் முதலாயினார் தத்தமக்கு
அளவான துறைநூல்களை. 4. கற்றென்றதனைக் கற்கவெனத் திரிக்க.
5. கழிந்தோர்
- வலியின் மிக்கோர். 7. தந்தென்றது இடவழுவமைதி.
9. வையத்துப்
பகலாற்றியென்றது வையத்தார்கண்ணே நடுவு
நிலைமையைச் செய்தென்றவாறு.
11. செம்மைபூண்
டென்றதுசெவ்வையைத் தான்பூண்டென்றவாறு.
12. அறனென்றது
அறக்கடவுளை. நன்காண்டவென்றது வலித்தது.
20. கடலிகுப்பவென்றது
கடலைத் தாழ்க்கவேண்டியென்றவாறு.
அருப்பம் வௌவி
(22) மிடல் சாய்த்து (21) எனக்கூட்டுக.
23. பெயரென்றது
பொருளை.
25. கட்டிப்புழுக்கு
- கட்டியொடு கூட்டின அவரைப்பரல் முதலான
புழுக்கு. 26. மட்டப்புகா - மதுவாகிய உணவு.
27. எழாத் துணைத்தோள்
- போரில் முதுகிட்டார்மேற் செல்லாத
இணை மொய்ம்பு. 33. ஞாண் பொர - நாண் உரிஞுதலால்.
இவ்வடைச்சிறப்பானே
இதற்கு, ‘வலிகெழு தடக்கை’ என்று
பெயராயிற்று.
மொய்ம்பினையுடைய
(34) தடக்கை (33) என மாறிக் கூட்டுக.
35. பாண்டிலென்றது
பாண்டிலையுடைய பக்கரையை.
காழெஃகம் பிடித்தெறிந்தும்
(37) விழுமத்திற் புகலும் (38) என்றதற்குப்
பகைவரென்னும் பெயரை வருவித்து, காம்பையுடைய வேலைப் பிடித்தெறிந்து
அப்பகைவர்க்கு இடும்பை செய்கையிலேயே விரும்புமென்றவாறு.
ஆலும் (42) நாடு
(47) என முடிக்க.
45. ஏறு மாறு
சிலைப்பவென்றது ஏறுகள் ஒன்றற்கொன்று மாறாக
முழங்கவென்றவாறு.
|