நன்னாடன்ன
(47) ஒண்டொடி (50) என முடிக்க.
மருக (13), உம்பல்
(24), கொங்கர் கோவே (25), குட்டுவரேறே (26),
பூழியர் மெய்ம்மறை (27), மரந்தையோர் பொருந (28), வயவர் வேந்தே (30),
வயவர்பெரும (39), ஓங்குபுகழோய் (40), ஒண்டொடி கணவ (50),
இறைகிழவோய் (57), ஈரம் உடைமையின் நீரோரனையை (14)
அளப்பருமையின் விசும்பனையை (15); கொள்ளக் குறைபடாமையின்
முந்நீரனையை (16); பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றுதலையுடையை (18);
ஆதலால் நினக்கு அடைத்த நாட்கள் உலகத்தில் திங்களனையவாகவென்றும்
நின்னுடைய திங்கள் (51) யாண்டனையவாக வென்றும் நின்னுடையாண்டு (52)
ஊழியனையவாகவென்றும் நின்யாண்டிற்கு ஒப்பாகிய அப் பல்லூழி தம்
அளவிற்பட்டபலவாய் நில்லாது (53) வெள்ளவரம்பினவாகவென்றும் நினைத்து
(54) நின்னைக் காண்பேன்வந்தேன் (55) எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற் சொல்லியது
அவன் தண்ணளியும் பெருமையும் கொடையும்
சுற்றந்தழாலும் உடன்கூறி வாழ்த்தியவாறாயிற்று.
‘ஒளிறு’ (6)
என்பது முதலாக நான்கடியும், ‘அறன்வாழ்த்த’ (12) என்பது
முதலாக இரண்டடியும், ‘கடலிகுப்ப’ (20) என்பது முதலாக இரண்டடியும்,
‘காழெஃகம் பிடித்தெறிந்து’ (37) என ஓரடியும் வஞ்சியடியாக வந்தமையான்
வஞ்சித்தூக்குமாயிற்று.
‘நின்னாள்’
(51) என்பது கூன்.
(கு
- ரை) 1. நட்சத்திரங்கள் தாம் இருத்தற்குரிய இடங்களிலே
இருப்ப அதனால் மழை பருவம் பெய்யாமற்காலத்திற் பெய்ய’’
‘’வியனாண்மீனெறி யொழுக’’ (மதுரைக். 6)
2.
உயிர்க்கு அச்சம் இல்லாமல் காவலாகித் துன்பம் தீர்ந்து:
‘’அச்சமறியா தேம மாகிய, மற்றை யாமம்’’ (மதுரைக்.
652-3) அச்சு:
அச்சமென்பதன் கடைக்குறை; ‘’நகையச் சாக நல்லமிர்து கலந்த’’
(பரி. 3 : 33); ‘’அச்சா றாக வுணரிய வருபவன்’’
(கலித். 75 : 20)
3-4. இன்பம்
உண்டாகிப் பெருகும்படி அந்தணர் முதலியோர் தமக்கு
அளவான துறைநூல்களைக் குறையாதபடி நிறையக் கற்று. சேரநாட்டில் கல்வி
நிறைந்ததைக் கூறியபடி. 8. மு. மதுரைக்.
72, 124.
5-8. வன்மையில்
மிக்கோர் போர்செய்யும் மிக்க வன்மைக்கு அஞ்சாத,
விளங்குகின்ற வாளையுடைய வலிய அரசர் ஆண்யானைகளோடு
அணிகலன்களைத் திறையாகக் கொடுத்துத் தம்முடன் பழமையைச் சொல்லி நீ
ஏவிய தொழிலைச்செய்ய. களிறொடு கலம் தருதல்: ‘’இருங்கண் யானையொ
டருங்கலத் துறுத்துப் பணிந்துவழி மொழிதலல்லது’’ (தொல்.
புறத். 6, இளம்.
மேற்.)
9. அகன்ற பூமியில்
நடுவுநிலைமையைச் செய்து; பகல் - நடுவு
நிலைமை; ‘’நெடுநுகத்துப் பகல்போல, நடுவுநின்ற நன்னெஞ்சினோர்’’
(பட்டினப். 206 - 7). 10. அழியாத பலவகையான
புகழ் அகன்ற
ஆகாயத்திலே பரவ. பல்புகழ்: பதிற். 12
: 8, உரை. ஊர்தல் - பரத்தல்;
‘’அழலம்பூ நறவார்ந் தழலூர்தர’’ (சீவக.
939)
11-3. வாளின்
வலியைப் பகைவரிடத்தே உறுவித்துச் செவ்வையை
மேற்கொண்டு, அறக்கடவுள் வாழ்த்தும்படி நன்கு ஆண்ட வெற்றியையுடைய
மாந்தரனென்னும் சேரவரசனது, விறலையுடைய வழித்தோன்றலாக உள்ளாய்.
விறலென்றது பிறரினும் மேம்பட்டுத் தோன்றுதல்; ‘’விறன்மலை’’ (கலித்.
8:6)
|