பக்கம் எண் :

259

     29-30. வெள்ளிய பூவையுடைய வேளைச்செடியோடு சுரைக்கொடி
இடந்தோறும் கலப்பச்செய்த, பலவாக வேறுபடுதலையுடைய
மொழிகளையுடைய பாசறையிலுள்ள வீரர்க்கு அரசே.

     விரவுமொழிக் கட்டூர்: ‘’விரவுமொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ’’
(அகநா. 212 : 14); ‘வேறுபல் பெரும்படை நாப்பண்பாடை வேறுபட்ட
பலவாகிய பெரிய படைக்கு நடுவே’ (முலைப். 43, ந.)

     31. கரையிலே வந்து உலாவுதலையுடைய கடலைப்போன்ற, பகைவரால்
தடுத்தற்கு அரிய சேனையோடு. 32. மாட்சிமைப்பட்ட தொழிலையுடைய
வில்லை மார்பிற் பொருந்த வளைத்து.

     33-4. நாண் உராய்தலால் தழும்பு விளங்கிய வன்மை பொருந்திய
பெரிய கைகளையும் நீண்டு அலங்கரித்தாலொத்த ஏந்திய திரண்ட
தோள்களையு முடைய. ‘’வலிதுஞ்சு தடக்கை’’ (புறநா. 54 : 14);
‘’ஆவஞ்சேர்ந்த புறத்தை தேர்மிசைச், சாவ நோன்ஞாண் வடுக்கொள
வழங்கவும்........................வலிய வாகுநின் றாடோய் தடக்கை’’ (புறநா.
14 : 8 - 11)

     35-6. நட்சத்திரங்கள் பூத்தாற்போன்ற விளங்குகின்ற மணிகளையுடைய
வட்டமான பக்கரையையும் மெல்லிய மயிரையுடைய கவரியையும் அணிந்த
குதிரையின் மேற்கொண்டு.

     குதிரைக்குக் கவரியணிதல்: ‘’முரசுடைச் செல்வர்புரவிச் சூட்டு, மூட்டுறு
கவரி தூக்கி யன்ன’’ (அகநா 156 : 1 - 2); ‘’ஒருதனிமா, ஞாங்கர் மயிரணியப்
பொங்கி,’ (பு. வெ. 90). 39. பதிற. 65 : 4.

     37 - 9. காம்பையுடைய வேலைப் பிடித்து எறிந்து பகைவர்க்குத்
துன்பத்தைச் செய்தலில் விரும்பும் நீங்காத ஆண்மையுடைய, நிலையாமை தம்
நெஞ்சிலே மிக்க வீரர்க்குத் தலைவனே.

     காழெஃகம்: மதுரைக். 739; மலைபடு. 129; புறநா. 354 : 2.

     40. உயர்ந்த பெரிய சிறப்பினையுடைய, மற்ற அரசரினும் மேம்பட்ட
புகழை யுடையோய். 41. உழவர் தண்ணுமை: அகநா. 40 : 13 - 4, 204 : 10;
புறநா. 348 : 1.

     41-2. வயலிலுள்ள உழவர் தண்ணுமைப்பறையை வாசித்தால்,
பழனத்திலுள்ள மயில் அதனோசையை மேகத்தின் ஓசையென்று எண்ணி
ஆடும். ஆலும் (42) நாடு (47) என இயையும்.

     43-4. குளிர்ந்த நீரில் ஆடுவோரது முழக்கத்தோடு கலந்து, கொடிய
போரைச் செய்யும் வீரரது தெளிந்த தடாரிப்பறை ஒலிப்ப.

     45. சோற்றையுடைய நல்ல வீடுகளில் ஏறுகள் ஒன்றோடு ஒன்று மாறாக
முழங்க (மதுரைக். 672)

     46-7. செழுமையான பலவாக இருந்த கொழுவிய பல குளிர்ந்த
வயல்களையுடைய காவிரிப்பக்கத்தையுடைய நல்ல சோழ நாட்டைப் போன்ற.

     49. ஆறிய கற்பு: ‘ஆறிய கற்பும் சீறிய கற்புமெனக் கற்பு இருவகை’,
(சிலப். பதிகம், 38 - 54, அடியார்.) ‘’ஆறிய கற்பினடங்கிய சாயல்’’ (பதிற்.
16 : 10). 50. ஒண்டொடி கணவ: பதிற். 14 : 15. உரை.

     48-50. தொழில்வளம் பொருந்திய சிலம்பினையும், அடங்கிய
கொள்கையையும், அறக்கற்பினையும், தெளிவாக அறியப்பட்ட நல்ல
புகழையும், வண்டுகள் ஒலிக்கும் கூந்தலையும் உடைய ஒள்ளிய தொடியை
அணிந்தோளுடைய கணவனே.