யாக்க
நாட்டிற்கு அவ்விடங்கள் சினையாகலின், நாடு
கவினழியவென்னும் முதற் பயனிலையோடு 1வழுவமைதியாக முடிக்க.
10 - 11. கூற்றடூஉ நின்ற யாக்கைபோல நாடு கவினழியவென மாறிக்
கூட்டிக் கூற்றுவனாலே கொல்லப்படாநின்ற யாக்கை ஒரு காலைக்கு ஒருகால்
அழகழியுமாறுபோல, நாடு அழகழியும்படியென உரைக்க.
இனி, மாறாதே
போலும்படி யென, போலவென்பதனை வினையெச்ச
நீர்மையாக்கி, போல்கின்றது மேல்வருகின்ற பாக்கமாக உரைப்பினும்
அமையும். 2 இனி, கூற்றுவனை அட்டுநின்ற யாக்கையை உடையானொருவன்
உளனாயினும் அவனைப்போல நீ சிவந்தென்றுரைப்பாரும் உளர்.
12. நீரழி பாக்கமென்றது 3வெள்ளத்தான் அழிவுபடினல்லாது
பகைவரான் அழியாத பாக்கமென்றவாறு.
பாக்கமென்றது நெய்தனிலத்து ஊர்க்கேயன்றி, 4"கட்கொண்டிக்
குடிப்பாக்கத்து, நற்கொற்கை" (மதுரைக்.
137-8) என்று வந்தமை யான்
ஒரோவழி 5அரசனிருப்புக்கும் பெயராமாகலின் ஈண்டு பாக்கமுடைய
பேரூர்களெனப்பட்டது.
14. உடைபோகவெனத்
திரிக்க.
17-9. மன்றத்து
உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து உள்ளுநர்
பனிக்கும் பாழென்றது அம்மன்றிலே போதற்கு உள்ளம் 6 அழியச்
செய்தே
பின்னும் தம் கரும வேட்கையாற் போக மேற்கொண்டவருடைய வலியைக்
கெடுத்தலானே பின்பு போக நினைப்பார் நடுங்குதற்குக் காரணமாகிய
பாழென்றவாறு.
18. தபுத்து:
தபுக்கவெனத் திரிக்க.
20. காடே
கடவுள் மேனவென்றது நின் நாட்டுப் பெருங்காடான
இடங்களெல்லாம் (முதற்காலத்துக்) கோயில்களான வென்றவாறு.
மேயினவென்பது
மேனவென்று இடைக் குறைந்தது. 20-21. புறவு
மகளிரொடு மள்ளர்மேனவென்றது சிறுகாடான இடங்களெல்லாம்
நின்படையாளர்கள் மகளிரொடு உறையும் 7படை நிலைகளாயின
வென்றவாறு.
1
வழுவமைதி என்றது சினைப்பெயர்கள் முதற்பயனிலையோடு
முடிந்தமையை.
2 இப்பொருள்
சிறப்புடையதன்று.
3
“செந்நீர்ப் பூச வல்லது, வெம்மை யரிதுநின் னகன்றலை நாடே”
(பதிற்.
28 : 13 - 4), “தண்புனற்
பூச லல்லது நொந்து, களைகவாழி வளவ
வென்றுநின், முனைதரு பூசல் கனவினு மறியாது”.
(புறநா.
42 : 7 - 9)
என்பவற்றை இவ்வுரை நினைப்பிக்கின்றது.
4 இங்கே
காட்டிய பகுதிக்கு
நச்சினார்க்கினியர்,
'கள்ளாகிய
உணவினையுடைய இழிந்த குடிகளையுடைய சீறூர்களையுமுடைய
நன்றாகிய கொற்கை' என உரை வகுத்தார்.
5
அரசனிருப்பு - இராசதானி
6 அழியச்
செய்தே - அழிந்துகொண்டிருக்கும்போதே; இச்சொல்
அழியச்சே என வழங்கும்.
7படைநிலை - படை தங்குமிடம்; இதனைப் பாடி என்றும்,
கைந்நிலை
என்றும் வழங்குவர்.
|