51.
நின்வாழ்நாட்கள் மாதத்தைப்போன்றன வாகுக.
51-2. மாதங்கள்
ஆண்டைப்போன்இறு ஒரு தன்மையவாக.
52-3. ஆண்டுகள்
ஊழிப்போன்றன வாகுக.
53-4. ‘’ஊழியோர்
பகலா யோதும் யாண்டெலா முலக மேழும் ஏழும்வீ
வுற்ற ஞான்று மின்றென விருத்தி யென்றாள்’’ (கம்ப.
உருக்காட்டு. 72);
ஐங்குறு. 281 : 1.
53-5. ஊழிகள்
வெள்ளமென்னும் பேரெண்ணின் எல்லையை
யுடையனவாகுக என நினைத்து, யான் நின்னைக் காண்பேன் வந்தேன்.
57. இறைகிழவோய்;
பதிற். 54 : 17.
55-7. போர்க்களத்தில்
மேற்பட்டு, இடியைப்போல முழங்கும்
முரசினையும், பெரிய நல்ல யானைகளையும் உடைய இறையாதற்றன்மையை
யுடையோய்.
(பி
- ம்) 27. திணித்தோள். 28. இலங்குநீர்ப். 29. மயங்கிய. 34.
வான்று புனைந்தன்ன. 37. காழ்மூழ்கப். (10)
இதன்பதிகத்து
விச்சி (4) என்பான் ஒரு குறுநிலமன்னன். வஞ்சி மூதூர்த்
தந்து (9) என்றது அவர்களை வென்றுகொண்ட பொருள்களை; பசுவும்
எருமையும் ஆடுமென்பாரும் உளர்.
11-2. அமைச்சியல்
மையூர்கிழானைப் புரோசுமயக்கி என்றது தன்
மந்திரியாகிய மையூர்கிழானைப் புரோகிதனிலும் அறநெறி அறிவானாகப்
பண்ணியென்றவாறு.
|
(பதிகம்) |
|
குட்டுவ
னிரும்பொறைக்கு மையூர் கிழாஅன்
வேண்மா ளந்துவஞ் செள்ளை யீன்றமகன்
வெருவரு தானையொடு வெய்துறச் செய்துசென்
றிருபெரு வேந்தரும் விச்சியும் வீழ |
5
|
அருமிளைக்
கல்லகத் தைந்தெயி லெறிந்து
பொத்தி யாண்ட பெருஞ்சோ ழனையும்
வித்தை யாண்டவிளம் பழையன் மாறனையும்
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று
வஞ்சி மூதூர்த் தந்துபிறர்க் குதவி |
10
|
மந்திரமரபிற்
றெய்வம் பேணி
மெய்யூரமைச்சியன் மையூர் கிழானைப்
புரையறு கேள்விப் புரோசு மயக்கி |
|