22.
ஆறே அவ்வனைத்தென்றது காடும் புறவும் அல்லாத
பெருவழிகளும், ஆறலைகள்வரும் 1பிற இடையூறுமின்றி முன்சொன்ன
கடவுளும் மள்ளரும் உறையும் இடமாயின வென்றவாறு.
அனைத்தென்னாது அவ்வனைத்தென்று சுட்டு இரட்டித்தது அந்த
அந்தத் தன்மையதென முன்நின்றவற்றின் பன்மை தோற்றற்கென்பது.
23. தாராவென்பது
தராவெனக் குறுகிற்று.
24. குடிபுறந்தருநரென்றது
தம் 2கீழ்க்குடிகளாகிய வரிசையாளரைப்
புறந்தரும் மேற்குடிகளாகிய காணியாளரை.
பாரமோம்பி
(24) நீ காத்த (28) என மாறிக் கூட்டுக.
வெள்ளி யோடாமல்
(25) எனவும் பசியிகந்தொருவ (27) எனவும் திரிக்க.
22-6. இனி,
ஆறு முன் சொன்ன அவ்வனைத்தாவதுமன்றி ஆறலை
கள்வரின்றிக் கூலம் பகர்வார் இயங்கும்படியான வழக்காலே அந்தக் கூலம்
பகர்வார் குடிகளைப் புறந்தந்தென்றும், குடிபுறந்தருநர் பாரத்தை ஓம்பி
மழைவேண்டு புலத்து மாரிநிற்பவென்றும், கூலம் பகர்நர் குடிபுறந்தருதலை
ஆற்றின் தொழிலாகவும் குடிபுறந்தருநர் பாரமோம்புதலை மழையின்
தொழிலாகவும் கூட்டி உரைப்பாரும் உளர்.
கூற்றடூஉநின்ற
யாக்கைபோல (11) நாடுகவினழிய நாமந்தோற்றி (10) நீ
சிவந்திறுத்த நீரழி பாக்கங்கள் (12) கழனி புல்லெனக் (13) காருடைபோகக்
(14) கழுது ஊர்ந்து இயங்கப் (15) பாழாயின (19); நீ காத்த நாட்டிற் (28) காடு
கடவுளான் மேவப்பட்டன (20); அந்நாட்டுப் புறவுகள் மள்ளரான்
மேவப்பட்டன. (21); அந்நாட்டு ஆறு அவ்வனைத்தாயிற்று; அன்றியும் (22)
கூலம்பகர்நர் குடிபுறந்தராக் (23) குடிபுறந்தருநர் பாரமோம்பி (24) நீ காத்த
நாடு (28), மழைவேண்டிய புலத்து மாரிநிற்ப (26) நோயொடு
பசியிகந்தொருவப் (27) பூத்தது (28) எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற் சொல்லியது
அவன் வென்றிச் சிறப்பும் தன் நாடுகாத்தற்
சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று.
'தொறுத்த' (1)
என்றும், 'ஏறுபொருத' (2) என்றும், 'ஒலிதெங்கின்'
(7) என்றும், 'புனல்வாயில்' (8) என்றும், இருந்த நான்கடியும் வஞ்சியடியான்
வந்தமையான், வஞ்சித்தூக்குமாயிற்று.
(கு
- ரை) 1-10. பகைவர் நாட்டின் பழையநிலை கூறப்படும்.
1. தொறுத்த
வயல் - ஆட்டுக்கிடைகட்டிய வயல்கள்; தொறு - ஆடு.
ஆரல் பிறழ்ந - தம்பால் நீர் நிரம்பி நிற்றலின், ஆரல்மீன் உகளுவதற்கு
இடமாயிருப்பவை.
1
பிற இடையூறுகளாவன: இடி வீழ்ச்சி, அரவு, காட்டுவிலங்கு
முதலியவற்றால் வருந்துன்பங்கள் (பெரும்பாண்.
39-43; சிலப்.
13-5-9)
2 கீழ்க்குடிகளென்றது
உழுதுண்ணும் வேளாளரையும்,
மேற்குடிகளென்றது உழுவித்துண்ணும் வேளாளரையும் குறித்தன.வரிசையாளர்
- வாரம் முதலிய பகுதி தருபவர்; காணியாளர் - நிலத்துக்குரியோர். இவ்விரு
வகையினரையும், “வீழ்குடி யுழவர்” (சிலப்.
5 : 43) என
இளங்கோவடிகளும் குறித்தனர்.
|