|
2.
ஏறு தம்முட் பொருதமையினாலே வயல் சேறு பட்டு
உழவேண்டாதனவாயின; செறு - வயல் (பெரும்பாண்.
210-11)
3.
பாத்தியின்கண் பூத்த நெய்தல். கரும்பின் பாத்தி; குறுந்.
262 : 7,
குறிப்புரை
4.
எருமையின் நிரை - எருமையின் வரிசை.
5-6.
ஆரவாரம் மிக்க துணங்கைக் கூத்தை மகளிர் ஆடிய இடங்களில்
அவர்கள் அணிந்து வீழ்த்திய ஆம்பல்மலர்களை வளைந்த தலையை யுடைய
முதிர்ந்த பசுக்கள் உண்டன. துணங்கை; "மகளிர் தழீஇய துணங்கை யானும்"
(குறுந்.
31 : :2) என்பதன் உரை முதலியவற்றைப் பார்க்க.
7.
ஒலித்தல் - தழைத்தல் என்பதற்கு மேற்கோள் (சீவக,653,ந.)
7-10. ஒலி தெங்கு - தழைத்த தென்னை. இமிழ் மருது - கிளி முதலிய
பறவைகள் ஒலிக்கின்ற மருதமரம். வைப்பு - ஊர்கள். கவின் - அழகு. நாமம்
- அச்சம்.
1-10.
பிறழ்ந, வித்துந, தடுக்குந, ஆர்ந: வினையாலனையும் பெயர்கள்.
பிறழ்ந முதலியவற்றையும், தெங்கையும், மருதையும், பொய்கையையும்,
வைப்பையும் உடைய நாடு.
11-9.
பகைவர் நாடு அழிந்தபின் நின்ற நிலை கூறப்படும்.
11.
கூற்றால் அடப்பட்டு நின்ற உடலைப்போல; என்றது பிணத்தை.
12.
சிவந்து-கோபித்து, நீரழி பாக்கம்: உரையைப் பார்க்க; தமது
இயல்பான நீர்மை அழிந்த ஊர்கள் எனலும், நீர்நிலைகள் அழிந்த ஊர்கள்
எனலும் ஆகும். சிவப்பென்னும் உரிச்சொல் வகுளிப்பொருளில் வருவதற்கு
மேற்கோள் (தொல்.
உரி. 74,
ந.)
13.
புல்லென - பொலிவழிய.
14.
திரிந்த காயையுடைய விடத்தேரையென்னும் முள்மரத்தோடு கரிய
உடைமரமும் வளரப்பெற்று; விடத்தர், உடை : முள் மரவகைகள். விடத்தர்
என்பது விடத்தேர், விடத்தேரை, விடத்தே தொடரி எனவும் வழங்கும்
(பெரும்பாண்.
184 - 5, ந. குறிப்புரை).
போகல் என்னும் உரிச்சொல்
நெடுமையை உணர்த்துதற்கு மேற்கோள் (தொல்.
உரி. 19,
91, ந.)
15.
'கவைத்தாட் பேய்மகள்' என்பது பெருவழக்கு. பேய்மகள் பேயை
ஊர்ந்து செல்ல. பேய்மகளும் கழுதும் பரந்து செல்ல எனலும் ஆம்.
16.
ஊரிய - பரந்த. நெருஞ்சியை யுடைய பறந்தலை, நீறாடு பறந்தலை
என்க; நீறு - புழுதி. பறந்தலை-வறுங்களம்.
17.
சாணம் இல்லையான, ஆரவாரம் அழிந்த மன்றம்; மன்றம் பசுக்கள்
தங்கும் இடம். முன்பு தாதெரு நிறைந்து கலிமிக்க மன்றமாக இருந்தது.
இப்பொழுது அவ்விரண்டும் இலதாயிற்று.
18.
உள்ளம் - மனவெழுச்சி. மிடல் தபுத்து வலியை அழித்து.
19.
பனிக்கும் - நடுங்கும்.
11-9.
பாக்கம் யாக்கைபோல, போகி, இயங்க, பறந்தலையையும்
மன்றத்தையுமுடைய பாழ்நிலமாயின; உரையாசிரியர்வேறு முடிபு கூறுவர்.
20-28.
சேரமன்னனாற் பாதுகாக்கப்பட்ட நாட்டின் நிலை கூறப்படும்.
|