பக்கம் எண் :

29

     20. காடு - பெருங்காடு. மேன - மேயின = விரும்பப்பட்டன. புறவு
- சிறுகாடு.

     21. மள்ளர் - வீரர்.

     20-21. சீவக. 2578, ந. மேற்.

     22. ஆறு - பெருவழி. அவ்வனைத்து : முற்று.

     23. கூலம் பகர்நர் - நெல் முதலிய பண்டங்களை விற்கும் வணிகர்.
புறந்தரா - பாதுகாத்து.

     24. குடிபுறந்தருநரென்றது வேளாளரை. பாரம் இங்கே குடும்பத்தைக்
குறித்தது; "பகடுபுறந் தருநர் பார மோம்பி" (புறநா. 35 : 32)

     25. அழல் - செவ்வாய். வெள்ளி-சுக்கிரன். செவ்வாயும் சுக்கிரனும்
சேர்ந்தால் மழை இலதாகும் என்பது சோதிட நூற்றுணிபு.

     26. புலம் - இடம். மாரி நிற்ப - மழை பெய்ய.

     27. நோயும் பசியும் நீங்கல் ஒரு நாட்டுக்கு இலக்கணம் (குறள்,
734; சிலப். 5 : 72; மணி. 1 : 71). இகந்து ஒரீஇ - விட்டு நீங்க; ஒரீஇ :
எச்சத்திரிபு.

     28 பூத்தன்று - பொலிவு பெற்றது.

     23-8. புறந்தரா, ஓம்பி, காத்த நாடு, ஓடாது நிற்ப ஒரீஇப் பூத்தன்று.

     மு. 'இதனுள் மறத்திற் சென்று நாட்டை அழித்தவாறும், அறத்திற்றிரிந்த
வேந்தனை அழித்து அவன் நாட்டைக் குடியோம்பிக் காத்தவாறும் கூறிற்று'
(தொல். புறத். 20, ந.)

     (பி - ம்) 1. தொறுத்தகு நீள்வயல். 16. ஊறிய நெருஞ்சி. 24.
குடிபுறந்தாரா. (3)

14. நிலநீர் வளிவிசும் பென்ற நான்கின்
அளப்பரி யையே
நாள்கோ டிங்கண் ஞாயிறு கனையழல்
ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை
 5 போர்தலை மிகுத்த வீரைம் பதின்மரொடு
துப்புத்துறை போகிய துணிவுடை யாண்மை
அக்குர னனைய கைவண் மையையே
அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர்பீ டழித்த செருப்புகன் முன்ப
 10 கூற்றுவெகுண்டு வரினு மாற்றுமாற் றலையே
எழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்து
நோன்புரித் தடக்கைச்
சான்றோர் மெய்ம்மறை
வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும்
வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பன்
 15 ஒடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ