|
15.
ஒடுங்கீரோதி - 1சுருள்.
நிலமுதற்
பூதம் நான்கும்போலப் (1) பெருமை அளத்த லரியை (2);
நாண்மீன்முதல் (3) ஐந்தையும் விளக்கத்தால் ஒப்பை (4); கை வண்மையால்
அக்குரனென்பவனை யொப்பை (7); அன்றி முன்ப (9), நின்வலி இருக்கும்படி
சொல்லிற் கூற்று வெகுண்டுவரினும் அதனையும் மாற்றும் வலியையுடையை
(10); ஆதலாற் சான்றோர் மெய்ம்மறை (12), கொடுங்குழை கணவ (15),
படையேருழவ, பாடினி வேந்தே (17), நின்குடி முன் முதல்வர்போல நின்று
(20) நல்லிசையை நிலைப்பித்து (21) இவ்வுலகத்தோடு கூடக்
கெடாதொழிகையாக (22) என வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் பல குணங்களையும் ஆற்றலையும் ஒருங்கு கூறி வாழ்த்தியவாறாயிற்று.
'அளப்பரியையே'
(2) எனச் சொற்சீரடி வந்தமையாற் 2சொற்சீர்
வண்ணமுமாயிற்று; ஈண்டுச் சொற்சீரென்றது அளவடியிற் குறைந்தும்
வஞ்சியோசையன்றி அகவலோசையாயும் வரும் அடியினை.
(கு
- ரை) 1 - 2. நிலத்தின் பரப்பும் நீரின் ஆழமும் வளியின்
செலவும் விசும்பின் ஓக்கமும் அளப்பரியன வாதலின், அவற்றை உவமை
கூறினார்; பல்வகைப் பெருமைக்கு அவற்றைக் கூறுதல் மரபு; பதிற்.
24 : 15-6; "இருமுந்நீர்க் குட்டமும், வியன்ஞாலத் தகலமும், வளி வழங்கு
திசையும், வறிது நிலைஇய காயமும், என்றாங், கவையளந்தறியினு மளத்தற்
கரியை" (புறநா.
20 : 1-5); "நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று,
நீரினு மாரள வின்றே" (குறுந். 3 : 1-2);
'மண்ணினும் வானினு மற்றை
மூன்றினும், எண்ணினும் பெரியதோ ரிடர்" (கம்ப. அயோமுகி,
99). பகைவர்
பிழை செய்தலைப் பொறுத்தலில் நிலத்தைப் போன்றும், அவர் வழிப்படின்
அவரை அளித்தலில் நீரைப் போன்றும், சதுரங்க வலியிலும் மனவலியிலும்
வளியைப் போன்றும், ஆராய்ச்சியின் விசும்பைப் போன்றும்
அவ்வத்தன்மையின்கண் அளத்தற்கு அரியையென உவமையைப்
பொருத்திக்கொள்க (புறநா.
2:1-8,உரை)
உம்மையும்
உருபும் விரித்தற்குப் பொருந்தாது எழுவாயாய் நான்
கென்னும் தொகைச் சொற்பயனிலை கொண்டுநின்றது (தொல்.
இடை. 43, ந.)
3
- 4. நாள்-நட்சத்திரங்கள். கனை அழல் - மிக்க தீ.
பல
பொருளினும் உளதாகிய கவின் ஓரிடத்துவரின், அதற்கு உவமை
யாமென்பதற்கு மேற்கோள் (தொல். உவம.
24, இளம்.) 1 - 4. இதில்
எண்ணுவண்ணம் வந்தது (இ. வி. 757)
5
- 7. ஈரைம்பதின்மர்-துரியோதனன் முதலிய கௌரவர் நூற்றுவர்; இது
தொகைக் குறிப்புப் பெயர். துப்பு - துணைவலி; "மூவருளொருவன் றுப்பா
கியரென" (புறநா. 122 : 5).அக்குரன் -
பாரதத்தில் கூறப்படுபவனும்.
தலையெழு
வள்ளல்களுள் ஒருவனுமாகிய அக்குரன் போலும்;
கர்ணனென்று நினைத்தற்கும் இடமுண்டு; ஆதாரம் கிடைக்கவில்லை.
1சுருள்
- ஐம்பாலுள் ஒன்று (பு. வெ. 223, உரை)
2சொற்சீர்வண்ணம்
பாஅவண்ணமென்றுங் கூறப்படும் (தொல்.
செய்யுள்.
213, பேர்). சொற்சீரடியின் இலக்கணம்: தொல்.
செய்யுள். 123, பேர்.
|