|
8
- 9. கடந்து - வஞ்சியாது எதிர்நின்று. தும்பை . அதிரப்பொருவோர்
சூடும் பூ. பகைவரது போரையும் பீட்டையும் அழித்த; பீடு-பெருமை. செரு
புகல் முன்ப - போரை விரும்புகின்ற வலியையுடையோய். பகைவர்
போர்பீடழித்தும் மேலும் போரை விரும்புபவனென்றவாறு (புறநா.
31 : 9)
10.
வெகுளியிற் கூற்றம் சிறத்தலின், 'கூற்று வெகுண்டு வரினும்' என்றார்;
"காலனனைய கடுஞ்சின முன்ப" (பதிற். 39
: 8) என்பதன் குறிப்பைப் பார்க்க;
"மாற்றருங் கூற்றம்" (தொல். புறத். .24).
ஆதலின் அவனை இங்கே கூறினார்.
கூற்றம் வரினும் மாற்றும் ஆற்றல்: கலித். 43
: 10; குறள்,
765; சீவக. 1114.
11.
ஞெமர்தல் - பரத்தல், அகலம் - மார்பு. எழுமுடி கெழீஇய அகலம் :
பதிற். 16 : 17, 40 : 13, 45 : 6; சிலப்.
28 : 169.
பகைவர்
முடிப்பொன்னால் ஆரம் செய்து அணிவதோடு அதனால்
கழல் செய்து புனைதலும் உண்டு (புறநா. 40
: 1 - 4)
12.
சான்றோர்-வீரர் (பதிற்.82:13). மெய்ம்மறை-கவசம்
போன்றவனே;
விளி.
13
- 5. சேரன் பெருந்தேவியின் எழில் கூறப்படும்.
14.
மிகையெனக் கருதி இழை அணியப்படவில்லை; இழை இங்கே
தலைக்கலன். கூந்தலின் இயற்கை மணங்கருதி வண்டுகள் மொய்த்தன.
15.மகளிரைச்
சார்த்து வகையாற் பாடுதலன்றித் தனித்துப் பாடுதல்
மரபன்றாதலின் இங்கே சோனொடு சார்த்தி அவன் மாதேவியைச் சிறப்பித்தார்;
"மக்களுட் பெண்பாலைப் பாடுதல் சிறப்பன்மையின், 'செயிர்தீர் கற்பிற்
சேயிழை கணவ' (புறநா. 13:6) என்றாற் போலச்
சிறுபான்மை
ஆண்மக்களோடு படுத்துப்பாடுப" (தொல். புறத்
.26, ந). இந்நூலுள்
பின்னரும் இங்ஙனம் வருதல் காண்க; பதிற்.24:11,
38:10, 42:7, 55:1, 61:4,
65:10, 70:16, 88:36, 90:50.
14
- 5. "தன்னிறங் கரந்த வண்டுபடு கதுப்பின், ஒடுங்கீ
ரோதியொண்ணுதல்" (பதிற். 81 : 27 -
8)
16
- 7. தொழுதி - தொகுதி. நுடங்கும் - அசையும். படை ஏர்
உழவ-படையை ஏராக உடைய உழவ. பாடினிவேந்து; விறலியருக்கு
ஆபரணங்களை அளித்தலின் இங்ஙனம் கூறினார்; பதிற்.
17 : 14.
18.
மணிகள் இடையிடையே அழுத்தப்பெற்ற பொன்னணிகளால்
விளங்கும் சக்கரம்; என்றது ஆக்ஞா சக்கரத்தை.
19.
கடலக வரைப்பு - பூமி. இப்பொழிலென்றது நாவலந்தீவை.
18
- 9. திகிரியால் ஆண்ட.
20.
முன் திணை முதல்வர் - குலத்தில் முன் இருந்த முதல்வர்;
திணை-குலம்.
முன்னோர்
வழியொழுகுதல்: மதுரைக். 192; புறநா. 58 : 25.
21.
நல்லிசையை நிலைபெறச் செய்து (பதிற். 86
: 5)
22.
தவாஅலியர் - கெடாமல் இருப்பாயக.
மு.
இது பரவற்கண் வந்த செந்துறைப் பாடாண் பாட்டு; இதனை
வாழ்த்தியலென்பர் (தொல். புறத். 27. ந.)
(பி
- ம்) 4. வந்தொருங்கு. 10.வரினும் பாற்றும். 12. சான்றோர்
மேமறை. 14. வண்டுபடு துப்பின், (4)
|