| 35 |
மண்ணுடை
ஞாலத்து மன்னுயிர்க் கெஞ்சா
தீத்துக்கை தண்டாக் கைகடுந் துப்பிற்
புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி
ஏம மாகிய சீர்கெழு விழவின்
நெடியோ னன்ன நல்லிசை
|
| 40 |
ஒடியா
மைந்தநின் பண்புபல நயந்தே. |
துறை
- செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் - ஒழுகுவண்ணம்.
தூக்கு - செந்தூக்கு. பெயர் - நிரையவெள்ளம் (4)
(ப
- ரை) நீ
சீற்றமொடு (2) அழல்கவர் மருங்கின் உருவறக்
கெடுத்து (7) என முடிக்க.
4.
நிரையவெள்ள மென்றது பகைவர்க்கு 1நிரையபாலரைப்போலும்
படைவெள்ளமென்றவாறு; நிரையமென்றது நிரையத்து வாழ்வாரை.
இச்சிறப்பானே
இதற்கு, ‘நிரைய
வெள்ளம்’ என்று பெயராயிற்று.
5.
மன்மருங்கறுப்பவென்றது மன் மருங்கறுப்பவேண்டி யென்றவாறு.
7.
கெடுத்தென்பதனைக் கெடுக்கவெனத் திரிக்க.
தொல்கவினழிந்த
கண்ணகன் வைப்பினையும் (8) புல்லாள் வழங்கும்
(12) புல்லிலைவைப்பினையுமுடைய புலஞ்சிதை (13) நாடு (15) என முடிக்க
8.
தொல்கவினழிந்த வைப்பென்றது சூடுண்டு அழிந்த ஊர்களை.
புல்லிலைவைப்பென்றது குடிபோய்ப் பாழ்த்த ஊர்களை.
9.
சுரை கலிக்கவெனத் திரிக்க.
10
- 11. நிறைமுதற் காந்தளெனக் கூட்டுக.
11
- 3. மூதில்லையுடைய புல்லிலைவைப்பெனக் கூட்டுக.
13.
புல்லிலை வைப்பென்றது புல்லிய இலைகளாலே 2வேயப்பட்ட
ஊரென்றவாறு; இதனை, 'நூலாக் கலிங்கம்' (பதிற்.
12 : 21) என்றது போலக்
கொள்க.
12.
புல்லாளென்றது புல்லிய தொழிலையுடைய ஆறலைகள் வரை.
அரம்பிற் (13) பகைவர் (15) என முடிக்க.
13.
அரம்பென்பது குறும்பு.
20
- 21. சீர்பெறு கலிமகிழியம்பும் முரசின் வயவரென்றது
வெற்றிப்புகழ்பெற்ற மிக்க மகிழ்ச்சியானே ஒலிக்கின்ற முரசினையுடைய
வீரரென்றவாறு.
19
- 20. நியமத்து இயம்புமென முடிக்க.
24
- 6. நீ வாழியரிவ்வுலகத்தோர்க்கெனத் திருந்துதொடை
வாழ்த்தவென முடித்து, இவ்வுலகத்தோர் ஆக்கத்தின் பொருட்டு நீ
1நிரைய
நரகம்.
2வேயப்பட்ட
வீடுகளையுடைய ஊர்.
|