|
வாழ்வாயாகவெனச்
சொல்லித் திருந்திய நரப்புத்தொடையினையுடைய
யாழொடு வாழ்த்தவென வுரைக்க.
தொடையொடென
விரியும் ஒடு வேறுவினையொடு.
25
- 6. மழலைநாவினையும் 1மென்சொல்லினையுமுடைய கலப்பையரென
கொள்க.
வெய்துறவறியாது
நந்திய வாழ்க்கையினையும் (27) ஒன்று மொழிந்து
அடக்கிய கொள்கையினையும்(29) நிரையமொரீஇய வேட்கையினையும் உடைய
புரையோர் (31) செய்த மேவலமர்ந்த சுற்றத்தோடு (28) பதி பிழைப்பறியாது
துய்த்தலெய்தி (30) மேயினருறையும் (32) நாடென (34) மாறிக் கூட்டியுரைக்க.
28.
செய்த மேவலமர்ந்த சுற்றமென்றது (சுற்றத்) தலைவர் செய்த
காரியங்களைப் பின் சிதையாது தாம் அவற்றை மேவுதலையுடைய
அத்தலைவரொடு மனம்பொருந்தின சுற்றமென்றவாறு.
செய்தனவென்பது
கடைக்குறைந்தது.
ஈத்துக்கை
தண்டா (36) மைந்த (40) என முடிக்க.
37.
2புரைவயிற் புரைவயிற் பெரியநல்கியென்றது உயர்ந்த
தேவாலயமுள்ள இடங்களிலே உயர்ந்த ஆபரணம் உள்ளிட்டவற்றைக்
கொடுத்தென்றவாறு.
நின்
பகைவர் நாடும் கண்டுவந்தேன் (15); அதுவேயன்றி வேந்தே,
வெறுக்கை (21), சேரலாத (23), நீ புறந்தருதலின், நோக்கந்தொரீஇய நின் (33)
நாடும் கண்டு மதிமருண்டேன் (34); இவை இரண்டும் காணவேண்டின
காரணம் யாதெனின், மைந்த, நின் பண்பு பலவற்றையும் காண நயந்து (40)
என வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன்வென்றிச் சிறப்பும் தன் நாடுகாத்தற்
சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1. யாண்டு தலைப்பெயர - ஓராண்டு செல்ல.
வேண்டுபுலத்து இறுத்து - தான் அழிக்கவேண்டிய நாட்டிற் சென்று தங்கி
(மதுரைக.் .234. ந.)
1
- 2 எரி பரப்புதல் : இதனை 'எரி பரந்தெடுத்தல்' என்னும்
துறையின்பாற் படுத்துவர் (பதிற். 25 :
7, 71 : 9 - 10; மதுரைக். 126,
154 - 6; கலித். 13 : 1 - 2; புறநா.
6 : 21 - 2, 7 : 8 - 9, 16 : 17,
23 : 10 - 11)
3.
தலைஇய - பெய்த; இது மதிலுக்கு அடை. மதின்மரம் -
கணையமரம்.
3-4.
முருக்கி - அழித்து. கணைய மரத்தைக் களிறுகள் முருக்கின.
யானை கொம்பால் இடிக்கும்பொழுது மதிற்கதவுகளுக்குப் பாதுகாப்பாக
அவற்றின் பின்னே அமைக்கப்படுவது கணைய மரம் (பதிற்.
16 : 5 - 8)
4.
களிறொழுகிய நிரைய வெள்ளம் - யானைகள் வரிசையாகச் சென்ற,
நகரபாலரைப் போன்ற படை. படையில் யானை தலைமையுடையதாதலின்
அதனை எடுத்துக்கூறினார்; "யானையுடையபடை" (இனியவை.
5);
1மென்சொல்
: இசைவல்லோரது மொழியும் மென்மையாக இருக்கும்;
"மென்மொழி மேவல ரின்னரம் புளர" (முருகு. 142)
2புரையென்பது
உயர்வைக்குறிப்பதாதலின் புரைவயின் என்பதற்கு
உயர்ந்த தேவாலயங்கள் என்று பொருளுரைத்தார்.
|