|
கஜரததுரகபதாதி
யென்பது வழக்கு. நிரைய வெள்ளம் : "நிரைய
வொள்வா ளிளையர் பெருமகன்" (குறுந். 258
: 6); "நிரையத் தானை" (சிலப்.
.26 : 37)
5.
பரவி ஆடுகின்ற கழங்குகள் அழிதற்குக் காரணமான அரசர்களின்
குலத்தை முற்றக் கெடுப்பதற்கு. கழங்கு அழிதலாவது எண்ணுதற்குக்
கருவியாகவுள்ள கழங்குகள் பொருளின் மிகுதியால் போதாவாதல். இங்கே
பகையரசர்களின் மிகுதிபற்றிக்கழங்கு அழிதல் கூறினார். கழங்கு -
கழற்சிக்காய். எண்ணுதற்கு இது கருவியாதல், "எல்லாமெண்ணி னிடுகழங்கு
தபுந" (பதிற். 32 : 8) என்பதனாலும் அறியப்படும்;
இவ்வழக்கம் இன்னும்
மலைநாட்டில் உள்ளது.
6.
கொடி - தீக்கொழுந்து. பிசிர - சிறிது சிறிதாகச் சிதறும்படி (பதிற்.
25 : 7)
7.
உருஅற - நாட்டின் பழைய உருவம் கெடும்படி. 8. வைப்பு
- ஊர்கள்.
9.
வேளை - ஒரு செடி. சுரை - சுரைச்கொடி. கலித்து - தழைத்து
வளர; எச்சத் திரிபு. அழிந்த நாட்டில் வேளையும் சுரையும் படர்தல்: "வேரறுகு
பம்பிச் சுரைபரந்து வேளைபூத், தூரறிய லாகா கிடந்தனவே....................முசிரியார்
கோமான், நகையிலைவேல் காய்த்தினார் நாடு" (முத்.)
10.
பீர் இவர்பு - பீர்க்கங் கொடி ஏறி. 'நிறைமுதல் -
நீர்ச்சாலினிடத்தில் (சீவக.
69, ந. மேற்.)
11.
காந்தள் முதல் - காந்தட்கிழங்கு; நீரற்றமையின் அது சிதைந்தது.
12.
புலவு வில் - எய்த அம்பினை மீட்டும் தொடுத்தலின் புலால்
நாற்றத்தையுடைய வில் (மதுரைக். 142, ந.).
வில் உழவு - விற்றொழிலாகிய
உழவு. புல்லாள் - வழிப்பறி செய்வோர்.
14.
துப்பு எதிர்ந்த - வலியொடு மாறுபட்டெழுந்த (புறநா.
54:8)
15.
வந்திசின் - வந்தேன்; கசின் தன்மைக்கண் வந்தது (புறநா.
22 : 36,
உரை).
16.
கடல - முத்து, பவளம் முதலிய நெய்தல் நிலத்துப் பொருள்கள்;
கல்ல - மணிமுதலாகிய குறிஞ்சி நிலத்துப் பொருள்கள்; யாற்ற -
முல்லையிலும் மருதத்திலும் உள்ள பொருள்கள்.
18.
விழவு அறுபு அறியா - விழாக்கள் நிற்றலை அறியாத; என்றும்
விழாவுடையது என்றபடி (பதிற். 29 : 7, 30
: 20). இமிழ் - ஒலிக்கின்ற.
19.
பலவகைக் கொடிகளின் நிழலில் அமைந்த பொன்னை மிகுதியாக
உடைய கடைவீதியின்கண். கொடிகள் இன்ன பொருளை விற்குமிடம்
என்பதை அறிவுறுத்துவதற்குக் கட்டப்படுவன (மதுரைக்.
365 - 6; பட்டினப்.
167 - 8, சிலப்.
14 : 216)
21.
பரிசிலர் வெறுக்கை - பரிசில் பெற வருவாருடைய செல்வமாக
இருப்பவனே; "அந்தணர் வெறுக்கை" (முருகு. .263)
22
- 3. தார் - கழுத்தில் அணிந்த மாலை (பெருங்.
.2. 2:197) எழிலிய
அழகுபெற்ற (புறநா. 68 : 5). தொடி சிதை
மருப்பின் - பகைவரது
மதிற்கதவத்தைப் பாய்ந்து அழித்தமையாலே பூண் சிதைந்த கொம்பையுடைய;
"கடிமதிற் கதவம் பாய்தலிற் றொடிபிளந்து, நுதிமுக மழுகிய மண்ணைவெண்
கோட்டுச், சிறுகண் யானை" (அகநா. 24 :
11 - 3)
|