|
24.
இவ்வுலகத்தோர் வாழும்பொருட்டு நீ வாழ்வாயாக.
25
- 6. கள்ளையுண்டமையால் சொல் தடுமாறிய மழலை வார்த்தையைப்
பேசும் நாவையும், மெல்லிய சொல்லையும், இசைக் கருவிகளைக் கொண்ட
பையையுமுடைய பாணர் முதலியோர், குற்றமற்றுத் திருந்திய நரப்புக்
கட்டுக்களையுடைய யாழின் இசையோடு வாழ்த்துக்கூற. உண்டு உரை மாறுதல்:
"உண்டுமகிழ் தட்ட மழலை நாவிற், பழஞ் செருக்காளர்"
(மதுரைக்.
668 - 9).
கலம் - யாழ் முதலியன. தொடை : இங்கே யாழ்; ஆகுபெயர்.
27.
வெய்துறவு - துன்பமுறுதலை. நந்திய - பெருகிய.
28.
சுற்றமொடு - உறவினர்களோடு.
29.
ஒன்று மொழிந்து - உண்மையையே சொல்லி. அடங்கிய கொள்கை
- ஐம்புலன்களும் அடங்கிய கோட்பாட்டினையுடைய; இது புரையோருக்கு
அடை (புறநா.
191 : 6 - 7)
30
- 31. இவனது செங்கோற் சிறப்பால் அவ்வூரை விட்டுச் செல்லாது
தங்கித் தவத்தாலாய நுகர்ச்சியைப் பெற்று நரகத் துன்பத்தினின்றும் நீங்கிய,
இவன் நாட்டிலேயே வாழவேண்டுமென்னும் விருப்பத்தையுடைய மேலோர்;
பெருங். 1. 40 : 386 - 8 ம் அடிகளிலும் இக்கருத்து வந்துள்ளது.
32.
மேயினர் - விரும்பி. உறையும் (32) நாடு (34) எனக் கூட்டுக.
33.
புறந் தருதலின் - பாதுகாத்தலினால்.
34.
யாணர் - புது வருவாயையுடைய.
35.
மண்ணுடை ஞாலம் - மண் அணுக்கள் செறிதலையுடைய பூமி.
(புறநா.
2 : 1). எஞ்சாது - குறையாமல்.
36.
கொடுத்து நீங்காத கையினிடத்துள்ள மிக்க வன்மையினாலே.
கைக்குத் துப்பாவது ஈகை. 38. ஏமம் - இன்பம்.
39
- 40. திருமாலைப் போன்ற, நல்லபுகழ் அழியாத வன்மையை
யுடையோய். புகழுக்குத் திருமாலை உவமை கூறுதல், "புகழொத் தீயேயிகழுந
ரடுநனை" (புறநா.
56 : 13) என்பதனாலும் அதன் அடிக்குறிப்பாலும்,
"உரைசால் சிறப்பி னெடியோன்" (சிலப்.
22 : 60) என்பதனாலும்
உணரலாகும்.
மு.
"யாண்டுதலைப் பெயர" என்னும் பதிற்றுப்பத்தும் அழிவு கூறிய
இடம் அடுத்தூர்ந்தட்ட கொற்றத்தின் பாற்படும் (தொல்.
புறத். 8, ந.)
(பி
- ம்) 5. கழங்குவழி. 8. கவினிழந்த
10. பீர்வாய் பரந்த. (5)
| 16. |
கோடுறழ்ந்
தெடுத்த கொடுங்க ணிஞ்சி
நாடுகண் டன்ன கணைதுஞ்சு விலங்கற்
றுஞ்சுமரக் குழாஅந் துவன்றிப் புனிற்றுமகள்
பூணா வையவி தூக்கிய மதில |
| 5 |
நல்லெழி
னெடும்புதவு முருக்கிக் கொல்லு
பேன மாகிய நுனைமுரி மருப்பிற்
கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி |
|