பக்கம் எண் :

38

மரங்கொன் மழகளிறு முழங்கும் பாசறை
நீடினை யாகலிற் காண்குவந் திசினே
 10 ஆறிய கற்பி னடங்கிய சாயல்
ஊடினு மினிய கூறு மின்னகை
அமிர்துபொதி துவர்வா யமர்த்த நோக்கிற்
சுடர்நுத லசைநடை யுள்ளலு முரியள்
பாய லுய்யுமோ தோன்ற றாவின்று
 15 திருமணி பொருத திகழ்விடு பசும்பொன்
வயங்குகதிர் வயிரமோ டுறழ்ந்துபூண் சுடர்வர
எழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்துப்
புரையோ ருண்கட் டுயிலின் பாயல்
பாலுங் கொளாலும் வல்லோய் நின்
 20 சாயன் மார்பு நனியலைத் தன்றே.


     இதுவுமது. பெயர் - துயிலின் பாயல் (18)

     (ப - ரை) 1. கோடுறழ்ந்து எடுத்த கொடுங்கணிஞ்சி யென்றது
மலையுள்ள இடங்களிலே 1அம்மலைதானே மதிலாகவும் மலையில்லாத
இடங்களிலே மதிலே அரணாகவும் இவ்வாறு மலையொடு மாறாட எடுத்த
வளைந்த இடத்தையுடைய புறமதிலென்றவாறு.

     உறழவெனத் திரிக்க. 'கோடுபுரந்தெடுத்த' என்பது பாடமாயின்,
மதிலில்லாத இடங்களை மலை காவலாய்ப் புரக்கவெடுத்தவென்க.

     2. நாடுகண்டன்ன 'கணைதுஞ்சு விலங்கலென்றது நெடுநாட்பட
2அடைமதிற்பட்ட காலத்தே விளைத்துக் கோடற்கு வயலும் குளமும்
உளவாகச் சமைத்துவைத்தமையாற் கண்டார்க்கு நாடுகண்டாற் போன்ற
3அப்புக்கட்டுக்கள் தங்கும் மலைபோன்ற இடைமதிலென்றவாறு.

     விலங்கல் போறலின் விலங்கலெனப்பட்டது. நாடுகண்டாலொப்பது
அம்மதிலையடைந்தவிடமென்னின், அவ்விடவணுமைபற்றி அதன்
உவமையை அம்மதில்மேலதாகக் கூறிற்றெனக் கொள்க.

     3. துஞ்சு மரமென்றது மதில்வாயிலில் தூங்கும் கணையமரங்களை;
இனிக் கழுக்கோலாக நாட்டிய மரமென்பாரும் உளர்.

     4. ஐயவியென்றது கதவிற்குக் காவலாகப் புறவாயிலிலே தூக்கப்படும்
துலாமரத்தை; அப்புக்கட்டென்பாரும் உளர். ஈண்டு மதிலென்றது உண்மதிலை.

     கொடுங்கணிஞ்சியையும் (1) விலங்கலையுமுடைய (2) மதில் (4) எனக்
கூட்டுக.    


     1மலை இயற்கையரணாகவும், மதில் செயற்கையரணாகவும் பயன்பட்டன;
"மணிநீரு மண்ணு மலையு மணிநிழற், காடு முடைய தரண்" (
குறள். 742)
என்பதையும் அதன் உரையையும் பார்க்க.

     2அடைமதிற்பட்ட காலம் - பகைவர் முற்றுகையிட்டமையால் மதில் அடைக்கப்பட்டுக் கிடக்கும் சமயம்

     3அப்புக்கட்டு - அம்புக்கட்டு.