|
1
- 4. மதிலின் சிறப்பு.
1.
மலைகளொடு மாறுபடக் கட்டிய வளைந்த இடங்களையுமுடைய
புறமதில். மதிலுக்கு மலை : பதிற். 62 :
10; மலைபடு. 92; கலித்.
2: 12;
பெருங். 3. 27 : 46.
2.
கணை - அம்பு. விலங்கல் - இடைமதில்; ஆகுபெயர்.
3-4.
துவன்றி - செறிந்து. புனிற்று மகள் - ஈன்ற அணிமையையுடைய
பெண். அவள் வெண்சிறுகடுகை அரைத்துப் பூசிக்கொள்ளுதல் மரபு. ஐயவி
- துலாமரம். வெண்சிறுகடுகை விலக்க, "புனிற்று மகள் பூணா வையவி"
என்றார். இது வெளிப்படை நிலை. 5-8. களிற்றின் இயல்பு.
4-5.
மதிலவாகிய புதவுகள்; புதவு - கதவு; அவற்றைக் களிறுகள்
கொம்பால் இடித்தன. முருக்கிக் கொல்லுபு - இடித்து அழித்து.
6.
ஏனமாகிய - பன்றியின் கொம்பைப்போலாகிய; ஏனம் - ஆகுபெயர்.
7.
பொத்தி - மூண்டு.
9.
நீடினை - குறித்த காலத்தே வாராமல் தாமதித்தாய். காண்கு
வந்திசின் - நின்னைக் காணவந்தேன்; காண்கு: செய்கென்னும் வாய்பாட்டு
முற்று; வந்திசின் என்னும் முற்றோடு முடிந்தது.
10-14.
சேரன்மாதேவியின் நிலை.
10.
ஆறிய கற்பின் - அறக்கற்பினையுடைய. இதனை அடங்கிய
கற்பென்றுங் கூறுவர் (குறுந். 338 : 7).
ஆறிய கற்பு : பதிற். 90 : 49;
சிலப். பதி. 38 - 54, அடியார்.
அடங்கிய சாயல் - அடங்கி நின்ற
மென்மையை உடைய. இவ்வடி, 'நீடினையாயினும் பெருந்தேவி தன்
கற்பினாலும், அடக்கத்தினாலும் பிரிவுத் துன்பத்தை ஆற்றி நின்றாள்'
என்னும் குறிப்புடையது.
12.
அமிர்தென்றது எயிற்றில் ஊறிய நீரை (குறுந்.
14 : 1 - 2,
குறிப்புரை). துவர்வாய் - செவ்வாய். அமர்த்த நோக்கின் - விரும்பிய
பார்வையையுடைய; அமர்த்த - மாறுபட்ட எனலுமாம் (குறள்.
1083-4,
பரிமேல்)
13.
அசைநடை - தளர்ந்த நடையையுடையவள்.
11-3.
இனிய கூறுதல் முதலியன பெருந்தேவியின் ஆறிய கற்புக்கு
அடையாளங்கள்.
14.
பாயல் உய்யுமோ- படுக்கையின்கண் படும் வருத்தத்தினின்றும்
தப்புவாளோ. பின்னர்க்கூறும் துயிலின் பாயலாகிய அகலத்தையே
விரும்புபவளாதலின் பாயல் உய்யாளாயினாள். தோன்றல்:விளி.
15.
பொருத - நிறத்தால் மாறுபட்டுத் தோன்றிய. திகழ் - ஒளி;
ஆகுபெயர்.
16.
சுடர்வர - விளங்க.
15.
எழுமுடி என்றது ஏழு அரசர்களை வென்றுகொண்ட ஏழு முடிகளாற்
செய்த ஆரத்தை (பதிற். 14 : 11, குறிப்புரை).
ஞெமர்தல் - பரத்தல்.
18.
உயர்ந்த மகளிர் மையுண்ட கண்கள் துயிலுவதற்கு இனிதாகிய
படுக்கை.
17-8.
சேரனது மார்பையே பாயலென்றார்; தலைவியர் தலைவர் மார்பில்
துயிலுதல் இயல்பு (நற். 20 : 2, 171 :
11; ஐங். 14 : 3 - 4, 205 : 4 - 5)
19.
பாலுங் கொளாலும் - பகுத்து அளித்தலையும் கொடாது வாங்கிக்
கொள்ளுதலையும்.
|