பக்கம் எண் :

41

     20. சாயல் - மென்மை. நனி அலைத்தன்று - அண்மையில்
இல்லாமையின் மிக வருத்தாநின்றது. (6)


17. புரைவது நினைப்பிற் புரைவதோ வின்றே
பெரிய தப்புந ராயினும் பகைவர்
பணிந்துதிறை பகரக் கொள்ளுநை யாதலிற்
றுளங்குபிசி ருடைய மாக்கட னீக்கிக்
 5 கடம்பறுத் தியற்றிய வலம்படு வியன்பணை
ஆடுநர் பெயர்ந்துவந் தரும்பலி தூஉய்க்
கடிப்புக் கண்ணுறூஉந் தொடித்தோ ளியவர்
அரணங் காணாது மாதிரந் துழைஇய
நனந்தலைப் பைஞ்ஞிலம் வருகவிந் நிழலென
 10 ஞாயிறு புகன்ற தீதுதீர் சிறப்பின்
அமிழ்துதிகழ் கருவிய கணமழை தலைஇக்
கடுங்கால் கொட்கு நன்பெரும் பரப்பின்
விசும்புதோய் வெண்குடை நுவலும்
பசும்பூண் மார்ப பாடினி வேந்தே.

     இதுவுமது.பெயர் - வலம்படு வியன்பணை (5)

     (ப - ரை) 5. வலம்படு வியன்பணையென்றது 1போர்செய்து வருந்தாமற்
பகைவர் வெருவியோட முழங்கி அரசனுக்கு வென்றி தன்பாலே படநின்ற
முரசமென்றவாறு
.

     இச்சிறப்பான் இதற்கு, 'வலம்படு வியன்பணை' என்று பெயராயிற்று.

     6. ஆடுநரென்றது 2வினையெச்சமுற்று வினைத்திரிசொல். அமிழ்து திகழ்
மழையென முடிக்க.

     3அமிழ்தென்றது நீர். தலைஇயென்பதனைத் தலையவெனத திரிக்க.

     13. வெண்குடைநுவலுமென்றது வெண்குடையின் 4அருட்சிறப்பைச்
சொல்லுமென்றவாறு.

     13-4. நுவலும் மார்பவென முடிக்க.


     1"வலனிரங்கு முரசு" (பரி. 7 : 6) என்பதற்கு, 'வெற்றியுண்டாக ஒலிக்கும்
முரசு' எனப்
பரிமேலழகர் எழுதிய உரை இங்கே ஒப்பு நோக்குதற்குரியது.

     2"வானின் றுலகம் வழங்கி வருதலாற், றானமிழ்த மென்றுணரற் பாற்று"
(
குறள். 11) என்பது இங்கே நினைத்தற்குரியது.

     3உலகத்திலுள்ளார் யாராயினும் தன் நிழற்கீழ் வரின் பாதுகாக்கும்
தன்மையாதலின் 'தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார்மேற் செல்வதாய' (
குறள்.
757, பரிமேல்.) அருளுடையதாயிற்று. சேரலாதனது அருளைக்
குடைமேலேற்றியது இலக்கணை.