இஃது
1ஏதுப்பெயர்.
வியன்பணையைக்
(5) கடிப்பைக் கண்ணுறும் இயவர் (7), 'அரணங்
காணாது மாதிரந் துழைஇய (8) பைஞ்ஞிலம் இந்நிழற்கண்ணே வருக' எனச்
சொல்லி (9) வெண்குடையின் அருட்சிறப்பைச் சொல்லுதற்குக் காரணமாய்நின்ற
(13) பசும்பூண்மார்ப, பாடினிவேந்தே (14), நினக்குப் புரைவது நினைப்பிற் (1)
பகைவர் பெரிய தப்புநராயினும் (2) பணிந்து திரைபகரக் கொள்ளுநையாதலின்,
(3), புரைவதோ வின்று (1) என மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது பொறையுடைமையொடு படுத்து அவன் வென்றிச்
சிறப்புக் கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1. புரைவது நினைப்பின் - நின்னைப்
பொறுமையினால்
ஒப்பதாகிய பொருளை ஆலோசித்தால். 'புரைவது இன்று - அங்ஙனம்
ஒப்பாம் பொருள் யாண்டும் இல்லை.
2-3
பகைவர்: எழுவாய். பெரிய தப்புநராயினும் - பெரியனவாகிய
பிழைகளைச் செய்தனரேனும். திறை பகர - நினக்குத் திறையை
வெளிப்படையாக அளிக்க. கொள்ளுநை - நின் சினம் மாறி அத்திறைகளை
ஏற்றுக் கொள்ளுவாய்.
1-3.
பெரும்பிழை செய்த பகைவராயினும் அவர் தன்னைப் பணியும்
காலத்து அவர் பிழையை மறந்து ஒழுகுபவனென்ற படி: "இணரெரி
தோய்வன்ன வின்னா செயினும். புணரின் வெகுளாமை நன்று" (குறள்,
308)
4-5.
பிசிர் உடைய - துளித்துளியாகச் சிதறும்படி (பதிற்.
11:1) கடம்பு
சேரனது பகைவருக்குரிய காவல்மரம். கடலரணிடையே இருந்த
பகைவராதலின் கடலை நீக்கிச் சென்று அம்மரத்தை அறுத்தனன்: நீக்கி -
கடந்து. வலம் - வெற்றி. சேரன் கடல்கடந்து சென்று கடம்பறுத்த செய்தி,
"இருமுந்நீர்த் துருத்தியுள்....... நெடுஞ்சேரலாதன் (பதிற்.
20 : 2 - 5),
"வலம்படு முரசிற் சேர லாதன், முந்நீ ரோட்டிக் கடம்பறுத்து", சால்பொருந்
தானைச் சேரலாதன், மால்கட லோட்டிக் கடம்பறுத் தியற்றிய, பண்ணமை
முரசு" (அகநா. 127
: 3-4, 347 : 4-6), "கடற்கடம்பெறிந்த காவலன்"
(சிலப்.
23 : 81) என்பவற்றாலும் உணரப்படும்.
பகைவரது
காவல்மரத்தால் முரசு செய்தல்: பதிற்.
11 : 12-4, குறிப்புரை.
வலம்படுபணை: புறநா.
304 : 9.
5-7
பணைக்குப் பலிதூவி. ஆடுநர் - ஆடுவாராகி. பலி - மலர்
முதலிய பூசைக்குரிய பொருள்கள்; "உருவச் செந்தினை குருதியொடு தூஉய்,
1ஏதுப்பெயரென்றது
மார்ப என்பதை. ஏதுப்பெயர் - காரணப் பெயர்.
நுவலுமென்னும் எச்சம் மார்பவென்பதைக் கொண்டு முடிந்தது. நுவலுதற்குக்
காரணமாகிய மார்பவென்னும் பொருள்படுதலின் இங்கே நுவலும் வினைக்கு
அப்பெயர்ப் பொருள் ஏதுவாயிற்று. தன்னை அடைந்தோரைக் காத்தற்கு
மார்பின் வலி காரணமாயிற்று; "மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப்,
பரிசிலர்த் தாங்கு முருகெழு நெடுவேஎள்" (முருகு.
272 - 3), 'கொடுக்கும்
பொருள் மார்பின் வலியான் உளதாமாகலின், அகல நோக்கின வென்றதாகக்
கொள்க' (புறநா.
155 : 9. உரை) என்பவற்றையும் காண்க.
|