மண்ணுறு
முரசங் கண்பெயர்த்து" (பதிற். 19 : 6-7)
எனப் பின்னரும்
வருதல் காண்க. முரசைப் பூசித்தல் : "கோற்றொழில் வேந்தன் கொற்ற
முரசம், பெரும்பணைக் கொட்டிலு ளரும்பலியோச்சி"
(பெருங்.
2. 2 : 29-30).
கடிப்பு - முரசை அடிக்கும் குறுந்தடி. அதனைக்
கண்ணுற்றது எடுத்து
அடிப்பதற்கு. இயவர் இங்ஙனம் செய்தல் 19 - ஆம் பாட்டாற் புலப்படும்.
இயவர் - அதனை அடித்தற்குரிய வள்ளுவர்; எழுவாய். ஆடுவாராகிப்
பணைக்கப் பலி தூவிக் கடிப்பைக் கண்ணுற்றுப் பின்வருவனவற்றைக் கூறினர்.
8-9.
இயவர் கூற்று. அரணம் - பாதுகாப்பு. மாதிரம் துழைஇய -
திசைகளெல்லாம் சென்று தேடிய. நனந்தலைப் பைஞ்ஞிலம் - விரிந்த
இடமாகிய உலகிலுள்ள மக்கட்டொகுதி. இந்நிழலென்றது சேரலாதன் குடை
நிழலை. என (9), நுவலும் (12) என்று முடிக்க.
10-13.
ஞாயிறு புகன்ற விசும்பு; தீதுதீர் சிறப்பின் விசும்பு; புகன்ற -
விரும்பிய. அமிழ்து - நீர். கருவிய - நீர் முதலிய தொகுதியை உடைய.
கணமழை - மேகக்கூட்டம். தலைஇ - பெய்ய; எச்சத்திரிபு. கடுங்கால்
கொட்கும் - வேகமாகிய காற்றுச்சுழன்று அடிக்கும். ஞாயிறு புகலுதல்
முதலியன விசும்புக்கு அடை. ஞாயிற்றின் வெயிலாலும், மேகத்தின்
மழையாலும், காற்றின் வேகத்தாலும் தடையுறாது நின்று பாதுகாக்கும்
குடையென்பது குறிப்பு. நுவலும் - புகழும். இயவர் (7) நுவலும் என்க.
14.
பசும்பூண் - பசும்பொன்னாலாகிய பதக்கம். பாடினி வேந்து:
பதிற் 14
: 17, குறிப்புரை.
தன்பாற்
புக்கோரைப் பாதுகாக்கும் அறிவுடையானென்பதை அவன்
இயல்பாகவும் அவனது குடையின் இயல்பாகவும் கூறிப்
பாராட்டியவாறு.
(பி
- ம்) 1. புரைவதோ வன்றே 9. பஞ்ஞிலம்
(7)
18. |
உண்மின்
கள்ளே யடுமின் சோறே
எறிக திற்றி யேற்றுமின் புழுக்கே
வருநர்க்கு வரையாது பொலங்கலந் தெளிர்ப்ப
இருள்வண ரொலிவரும் புரியவி ழைம்பால் |
5 |
ஏந்துகோட்
டல்குன் முகிழ்நகை மடவரற்
கூந்தல் விறலியர் வழங்குக வடுப்பே
பெற்ற துதவுமின் றப்பின்று பின்னும்
மன்னுயி ரழிய யாண்டுபல துளக்கி
மண்ணுடை ஞாலம் புரவெதிர் கொண்ட |
10 |
தண்ணிய
லெழிலி தலையாது மாறி
மாரி பொய்க்குவ தாயினும்
சேரலாதன் பொய்யல னசையே. |
துறை
- இயன்மொழி வாழ்த்து. வண்ணம் - ஒழுகுவண்ணம்,
தூக்கு - செந்தூக்கு. பெயர் - கூந்தல்விறலியர் (6)
|