(ப
- ரை) 2. திற்றி - இறைச்சி.
வருநர்க்கு
வரையாது (3) வழங்குக அடுப்பு (6) என முடிக்க;
வரையாமல் எனத் திரித்து வரையாதொழியும்படியெனக் கொள்க.
பொலங்கலந்
தெளிர்ப்ப (3) என்பதனையும் வழங்குக (6) என்பதனோடு
முடிக்க.
6.
கூந்தல்விறலியர் வழங்குக அடுப்பென்றது வந்தார்க்குச் சோறு
கடிதின் உதவுதற்பொருட்டு அடுப்புத்தொழிற்குரியரல்லாத 1வரிசை
மகளிரும்
அடுப்புத்தொழிலிலே வழங்குகவென்றவாறு.
இச்சிறப்பானே
இதற்கு, 'கூந்தல் விறலியர்'
என்று பெயராயிற்று.
ஐம்பாற்
(4) கூந்தல் (6) என மாறிக்கூட்டுக; இனி மாறாது கூந்தல்
விறலியரென்றதை 2ஒரு பெயராக உரைப்பினும் அமையும்.
நீயிர்
கள்ளினையுண்மின்; அதுவேயன்றி உண்டற்குச் சோற்றையடுமின்;
அதுவேயன்றித் (1) தின்றற்குத் திற்றியையறுமின்; அதுவேயன்றித் தின்றற்குப்
புழுக்கப்படுமவற்றை அடுப்பிலேயேற்றுமின் (2); வருநர்க்கு வரையாதே
கடிதின் உதவுதற்பொருட்டுக் (3) கூந்தல் விறலியர் அடுப்பிலே வழங்குக (6);
இன்னும், வருநர்க்குச் சோறிடுதலேயன்றி அவன்பால் நாம் பொருளாகப்
பெற்றது கொடுமின்; இவ்வாறு எல்லாங் கொடுத்தாலும் பின்னுக்குக்
காரியத்தில் தப்பில்லை (7); அதற்கு யாது காரணமெனின், மன்னுயிரழிய (8)
மாரி பொய்த்தாலும், (11) சேரலாதன் நசைபொய்யலன் (12); அதுகாரணமென
வினைமுடிவு செய்க.
இதனாற்சொல்லியது
அவன்கொடைச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
(கு
- ரை)
2. திற்றி எறிக - தின்றற்குரிய மாமிசத்தை
அறுத்திடுக;
திற்றி - தசை; "அழித்தானாக் கொழுந்திற்றி"
(மதுரைக். 217). புழுக்கு -
புழுக்குதற்குரிய பருப்புவகை.
3.
தெளிர்ப்ப - ஒலிக்க (ஐங்.
24 : 4)
4.
இருண்ட வளைந்த தழைத்தல் பொருந்திய ஐந்து பகுதிகளையுடை;
ஐம்பாலாவன: குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை யென்பன
(சீவக.
2437. ந.)
5.
கோடு - பக்கம். 6. அடுப்பு வழங்குக - சமையலைச் செய்க.
7.
தப்பு இன்று - பிழை இல்லை.
8.
யாண்டு பல துளக்கி - பல ஆண்டுகளாக நடுங்கச்செய்து.
9.
ஞாலம் புரவு எதிர்கொண்ட - உலகத்தைப் பாதுகாத்தலை
ஏற்றுக்கொண்ட.
9.
தண்ணிய இயல்பையுடைய மேகம் பெய்யாமல் மாறி.
9-10.
"உலகத்து, மழைசுரந் தளித்தோம்பு நல்லூழி" (கலித்.
99 : 4 - 5)
12.
நசை பொய்யலன் - விரும்பிய பரிசிற்பொருளைத் தருதலிற்
பொய்த்தல் செய்யான்; "இரவலர்க் குள்ளிய, நசைபிழைப் பறியாக் கழறொடி
யதிகன்" (அகநா.
162 : 17 - 8)
1பரிசில்
பெறுதற்குரிய மகளிர்.
2கூந்தல்
விறலியரென்றது அனைத்தும் ஒரு பெயராகி இடுகுறி
மாத்திரையாய் நின்றது; ஐம்பாலென்று முன்னர் வந்ததைக் கூந்தலென்னும்
பொருளுடையதாக்கி, இங்குள்ள கூந்தலென்பதைப் பொருளில் அடையாக்கின்
இங்ஙனம் இலக்கணம் கூறுக.
|