பின்
நமக்கு இலதாகுமே என அஞ்சாமற் பெற்றதை உதவுமின்; அவன்
பின்னும் பொய்யாது தருவானென்றபடி.
(பி
- ம்) 7. பெற்ற வுதவுமின். 8. மன்னுயி
ரொழிய. 12. பொய்
யிலனசையே. (8)
19. |
கொள்ளை
வல்சிக் கவர்காற் கூளியர்
கல்லுடை நெடுநெறி போழ்ந்துசுர னறுப்ப
ஒண்பொறிக் கழற்கான் மாறா வயவர்
திண்பிணி யெஃகம் புலியுறை கழிப்பச் |
5 |
செங்கள
விருப்பொடு கூல முற்றிய
உருவச் செந்திணை குருதியொடு தூஉய்
மண்ணுறு முரசங் கண்பெயர்த் தியவர்
கடிப்புடை வலத்தர் தொடித்தோ ளோச்ச
வம்புகளை வறியாச் சுற்றமோ டம்புதெரிந் |
10 |
தவ்வினை
மேவலை யாகலின்
எல்லு நனியிருந் தெல்லிப் பெற்ற
அரிதுபெறு பாயற் சிறுமகி ழானும்
கனவினு ளுறையும் பெருஞ்சால் பொடுங்கிய
நாணுமலி யாக்கை வாணுத லரிவைக் |
15 |
கியார்கொ
லளியை
இனந்தோ டகல வூருட னெழுந்து
நிலங்கண் வாட நாஞ்சில் கடிந்துநீ
வாழ்த லீயா வளனறு பைதிரம்
அன்ன வாயின பழனந் தோறும் |
20 |
அழன்மலி
தாமரை யாம்பலொடு மலர்ந்து
நெல்லின் செறுவி னெய்தல் பூப்ப
அரிநர் கொய்வாண் மடங்க வறைநர்
தீம்பிழி யெந்திரம் பத்தல் வருந்த
இன்றோ வன்றோ தொன்றோர் காலை |
25 |
நல்லம
னளிய தாமெனச் சொல்லிக்
காணுநர் கைபுடைத் திரங்க
மாணா மாட்சிய மாண்டன பலவே. |
துறை
- பரிசிற்றுறைப் பாடாண்பட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணமும் சொற் சீர் வண்ணமும். தூக்கு - செந்தூக்கு. பெயர்
- வளனறு பைதிரம் (18)
|