(ப
- ரை) 1. கவர் கால் - செலவை விரும்பின
கால். 2. சுரன்
- வழியில் அருமை.
4.
எஃகம் புலியுறை கழிப்பவென்றது 1எஃகினைப் புலியுறை கழித்துக்
2கடைவன கடைந்தும் அல்லன 3வாய்கீறியும்
போர்க்குரியவாம்படி பண்ண
என்றவாறு.
6.
கூலம் முற்றியவென்றது பண்டமாக முற்றியவென்றவாறு; இனிப்
பலிக்குரிய மற்றைப்பண்டங்கள் குறைவறக்கூடின வென்பாரும் உளர்.
9.
வம்பு - 4கைச்சரடு. சுரனறுப்பப் (2) புலியுறை கழிப்பத் (4)
தோளோச்ச (8) அவ்வினை மேவலை (10) என முடிக்க.
11.
எல்லு நனியிருந்தென்றது 'பகற்பொழுதின் கண்ணே ஒரு
5வினோதமும் இன்றி நெடுக வருந்தியிருந்தென்றவாறு.
பெற்ற
(11) மகிழ் (12) என முடிக்க.
அரிது
பெறுதலைப் பாயன்மேல் ஏற்றுக. ஈண்டுப் பாயல் உறக்கம்.
ஊருடனெழுந்து
இனந்தோடகல (16) எனவும், நாஞ்சில் கடிந்து
நிலங்கண் வாட (17) எனவும் கூட்டுக. ஊரெழுந்தென்னும் முதல் வினையை
வழுவமைதியால் இனந்தோடகல வென்னும் அதன் சினை வினையொடு
முடிக்க.
தோடகலக்
(16) கண்வாட (17) அன்னவாயின (19) என முடிக்க. ஈண்டு
ஆயினவென்பது 6தொழிற்பெயர்.
17-8.
நீ வாழ்தலீயாவென்றது நீ பண்டுபோலே குடியேறுக வென்று
வாழ்வுகொடாதவென்றவாறு.
'வாழ்தலீயா'
என்ற அடைச்சிறப்பான் இதற்கு, 'வளனறு பைதிரம்' என்று
பெயராயிற்று.
20.
தாமரை மலரவெனத் திரிக்க.
22.
கொய்வாள் மடங்கவென்றது நெற்றாளின் பருமையாலே கொய்யும்
அரிவாட்கள் தங்கள் வாய் மடியவென்றவாறு.
23.
எந்திரமென்றது ஆலையை. எந்திரமென்னும் முதலெழுவாயை
வழுவமைதியாற்பத்தல் வருந்தவென்னும் அதன் சினை வினையோடு
முடிக்க. பத்தல் வருந்தலாவது பலகாலும் சாறோடி 7நனைந்து சாதல்.
தாமரை
மலர (20) நெய்தல் பூப்ப (21) வாள் மடங்கப் (22) பத்தல்
வருந்த (23) நல்ல (25) என முடிக்க.
27.
மாணா மாட்சிய மாண்டனவென்றது மாட்சிமைப்படத் திருத்தினும்
மாட்சிமைப்படாத அழகையுடையவாய்ப் பின்னைத் திருந்தாதவளவேயன்றி
உரு மாய்ந்தனவென்றவாறு. மாணாதவற்றை மாட்சிய வென்றது பண்டு
அழகிய ஊரும் வயலுமாய்த் தோன்றிக்கிடந்த பண்புபற்றி எனக் கொள்க.
மாட்சியவென்பது வினையெச்சமுற்று.
1எஃகென்றது
ஆயுதப் பொது.
2கடைவன அம்புகள்
3வாய்கீறுதல் - தீட்டுதல்;
வேலும் வாளும் தீட்டற்குரியன. பண்ண -
சித்தம் செய்ய.
4கைக்கு அணியும் தோலாலாகிய
கவசம்.
5வினோதம் - பொழுதுபோக்குக்குரிய
விளையாட்டு.
6தொழிற்பெயர் - வினையாலணையும்
பெயர்.
7நைந்து சாதலென்றிருப்பின்
சிறக்கும்.
|