பக்கம் எண் :

47

     இனி மாணாமாட்சியவென்பதற்குமாணாமைக்குக் காரணமாக 1பெருக்கு
முதலாயவற்றின் மாட்சிய என்பாருமுளர்.

     பலவாகிய (27) நீ (17) வாழ்தலீயா வளனறு பைதிரம் (18)
ஊருடனெழுந்து இனம் தோடு அகல (16) நாஞ்சில் கடிந்து நிலங்கண் வாட
(17) அன்ன வாயினவை பழனந்தோறும் (19) தாமரை ஆம்பலொடு மலர (20)
நெல்லின்செறுவில் நெய்தல் பூப்ப (21) அரிநர் கொய்வாள் மடங்க அறைநர்
(22) எந்திரம் பத்தல் வருந்தத் (23) தொன்றோர்காலை (24) நல்லமன்
அளியதாமெனச் சொல்லிக் (25) காணுநர் கைபுடைத்திரங்க (26)
மாணாமாட்சிய மாண்டன (27) எனக் கூட்டுக. பைதிரம் (18) என்னும்
எழுவாய்க்கு மாண்டன (27) என்றது பயனிலை; அன்னவாயின (19) என்னும்
பெயரும் இடையே ஒரு பயனெனப்படும்.

     அன்னவாயின (19) மாணாமாட்சிய மாண்டன (27) என்றது பைதிரங்கள்
(18) ஊருடனெழுதல் (16) முதலாய வறுமையையுடைய அளவாய் நின்றன; பின்
அவ்வளவினவன்றித் திருத்தவும் திருந்தா நிலைமையவாய் நின்றன; பின்
அவ்வளவுமன்றி 2ஊரும் வயலும் தெரியாதபடி உருவம் மாய்ந்தன (27)
என்றவாறு.

     நீ அவ்வினை மேவலையாயிருந்தாய்; நீ வினையை மேவுகின்றபடியால்
(10) கனவினுள் உறையும் (13) நின்னரிவைக்கு (14) நீ யார் கொல் (15)? நீ
அவள்பால் வாராமைக்குக் காரணம் யாது? நீ அழிக்க என்று அழிந்த
நாடுகள் அழிந்து அற்றால் வருவலெனின், ஆம்; அழிக்க அழிந்து நீ பின்
வாழ்தலீயாத பைதிரம் (18) காணுநர் கைபுடைத் திரங்க (26)
மாணாமாட்சியவாய் மாண்டன (27); அதனால் அது குறையன்று: நின்
அன்பின்மையே குறை; இனி நீ அவள்பாற் கடிது எழுகென வினைமுடிவு
செய்க3.

     இதனாற் சொல்லியது அவன்வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த
இன்பச்சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று.

     பாணன் பாசறைக்கண் வந்து தேவி ஆற்றாமை கூறி இனி அவள்பாற்
போகவேண்டுமென்று இரந்தமையாற் பரிசிற்றுறையாயிற்று.

     'அவ்வினை மேவலை யாகலின்' (10) எனவும், 'யார்கொ லளியை'
(15) எனவும் சொற்சீர் வந்தமையாற் சொற்சீர் வண்ணமும் ஆயிற்று.

     (கு - ரை) பாசறையிலிருந்த மன்னன்பால் தூதுவந்த பாணனது
கூற்றாக அமைந்தது இச்செய்யுள்

     1. கொள்ளை வல்சி - வழிப்பறித்த பொருள்களை உணவாகவுடைய.
கவர் - விரும்பும் (
தொல். உரி. 64). கூளியர் - மறவர். கொள்ளை வல்சிக்
கூளியர் :
புறநா. 23 : 5 - 7.

     2. துறுகற்களையுடைய நீண்ட வழியை அகழ்ந்து அருவழியை
வரையறுக்க. கற்களையுடைமையானும் அருவழியாதலானும் படை செல்லும்
பொருட்டு வழியை ஒழுங்கு செய்தனர்.

     3. ஒண்பொறிக் கழற்கால் - தாங்கள் செய்த அரிய போர்த்
தொழில்களைப் பொறித்தலையுடைய ஒள்ளிய கழற்கால் (
பதிற். 34:2,
உரை). மாறா - வீரத்தினின்றும் மாறுபடாத. வயவர் - வீரர்.


     1பெருக்கு - மிக்க வெள்ளம்.

     2"ஊரறிய லாகா கிடந்தனவே" (முத்)

     3இம்முடிவில் உரையாசிரியர் பல செய்திகளை இசையெச்சத்தால்
வருவித்து உரைத்தனர்.