பக்கம் எண் :

48

     4. எஃகம் - வேல். புலித்யுறைகழிப்ப - புலித்தோலாற் 'செய்யப்பெற்ற
உறையை விட்டு எடுக்க. வேலையும் உறையிற் செறித்தல் மரபு (பதிற். 24 : 2;
புறநா.
323 : 7).5. செங்கள விருப்பொடு - இரத்தத்தாற் சிவக்கும்
போர்க்களத்திற்குச் செல்லும், விருப்பத்தோடு. கூலம் முற்றிய - கூலமாக
நிறைந்த; கூலம் - தானியம்.

     6. உருவச் செந்தினை - சிவந்த நிறத்தையுடைய தினையை. குருதியொடு
தூஉய் - இரத்தத்தோடு தூவி (பதிற். 29 : 11 - 2). தினையையும் குருதியையும்
தூவிப் பூசித்தல் வழக்கம் (முருகு. 242; அகநா. 22 : 10). வீரமுரசத்தை
இரத்தத்தைக் கொண்டு பூசித்தல்: பதிற். 29. 11 - 2; புறநா. 50 : 5, மணி.
1 : 30 - 31.

     7. மண்ணுறு முரசம் - நீராட்டப்பெற்ற வீரமுரசம். கண்பெயர்த்து
- அடிக்கும் பக்கத்தைத் திறந்து. இயவர் - வள்ளுவர் முதலியோர்.

     8. கடிப்பு - குறுந்தடி; தோள் ஓச்ச - தோளால் அடிக்க; தோள் - கை.

     9. வம்பு களைவு அறியா - கைச்சரடு களைதலை அறியாத. சுற்றம் -
படைவீரர். அம்பு தெரிந்து - அம்புகளை ஆராய்ந்து.

     10. அவ்வினையென்றது போரை, மேவலை - விரும்புதலை உடையாய்.

     கூளியர் சுரனறுப்பவும் வயவர் எஃகத்தை உறையினின்றும் கழிப்பவும்
இயவர் தோள் ஒச்சவும் நீ சுற்றத்தோடு அவ்வினையினிடத்தே விருப்ப
முடையாயாயினாய்.

     11-4. சேரன் மாதேவியினது நிலைமை கூறப்படும்.

     11, எல்லு - பகலில். நனி இருந்து - நன்றாக நின் பிரிவை
ஆற்றியிருந்து; இருத்தல் - இங்கே ஆற்றியிருத்தல் (தொல். அகத். 14).
எல்லி - இரவில்.

     12. அரிதிற் பெறுகின்ற துயிலின்கண் உண்டாகும் சிறுமகிழச்சிக்
காலத்தும்.

     11-3. பகலெல்லாம் ஆற்றியிருந்து இரவிற் சிறிதுநேரம் துயின்றாலும்
அந்நேரத்தும் கனவு கண்டு வருந்தினாளென்றபடி.

     13-4. பெருஞ்சால்பினால் ஒடுங்கிய யாக்கையையும், நாணுமலி யாக்கை
யையும் உடைய அரிவை.

     15. யார்கொல் - என்ன உறவுடையை? என்றது அவள்பால்
அன்பிலன்போலப் பிரிவு நீட்டித்தாயென்ற குறிப்பினது.

     16. இதுமுதல் சேரனுடைய பகைவர் நாட்டின் நிலை கூறப்படும்.

     ஊரினர் ஒருங்கே எழுந்து இனத்தினரும் பசு முதலிய தொகுதியும்
விட்டு நீங்க.

     17. உழுவாரின்றிக் கலப்பைகள் வெறுக்கப்பட்டு அதனால் நிலம்
வளப்பமின்றிப் பொலிவழிய; "நாடுவறங் கூர நாஞ்சி றுஞ்ச" (அகநா. 42 : 5)

     18. வளன் அறு பைதிரம் - வளப்பம் அற்ற பகைவர் நாடுகள்.

     19. அன்னவாயின - அகலவும், வாடவும் பெற்ற அந்நிலையினவாயின.
பழனம் - வயலைச் சார்ந்த பொய்கை.

     20. அழல்மலி : மலி, உவம உருபு; அழல்போன்ற மிக்க தாமரை
எனலும் ஆம். தாமரைக்கு நெருப்பு உவமை: பதிற் 23:23; பெரும்பாண்.
289 - 90. குறிப்புரை. 21. செறு - வயல்.